முஸ்லிம் அமைச்சர்களின் ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது பற்றி இதுவரை எதுவும் வெளியானதை காணவில்லை. அதிலிருந்து ஒன்று புரிகிறது. அதாவது இந்த அமைச்சர்கள் தமது சமூகத்தை சமாளிக்கப்போகிறார்கள் என்று.
ஜனாதிபதி மீது எமக்கு நம்பிக்கை இருக்கிறது. விரைவில் இந்த பிரச்சினைகளுக்கு தீhவு வழங்குவதாக ஜனாதிபதி உத்தரவாதமளித்துள்ளார் என்பன போன்ற பேச்சுக்கள் வெளியே வரும். மு.காவுக்கு இரண்டு பிரதி அமைச்சு பதவி தருவேன் என காதோடு காதாக சொல்லியிருப்பார். அதனால் கூடிய கதியில் முஸ்லிம் கட்சிகள் பழைய புராணம் ஒன்றை பாடுவார்கள்.