BREAKING NEWS

ஹக்கீம், அதா, ரிசாதுக்கு விசாரணை இல்லை, முஜிபுர் ரஹ்மான் மீது விசாரணை; சி.ஐ.டி. அழைப்பு!

Mujeburahman

மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மத்தி இணை அமைப்பாளருமான முஜீபுர் ரஹ்மானை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 புதன்கிழமை காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அவர் கேற்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினை கண்டித்து மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் தலைமையிlaana முஸ்லிம் உரிமைகள் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது அந்த அமைப்பின் உறுப்பினர்கள் நால்வர் கொழும்பில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்களுக்கு சென்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு வற்புறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையிலேயே மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் குற்றப்புலனாய்வு பிரிவினரால் அழைக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar