BREAKING NEWS

தேசிய புலனாய்வுத்துறை தொடர்பில் பாரிய காட்டிக்கொடுப்பு முயற்சி


நாட்டின் தேசிய புலனாய்வு துறையினர் தொடர்பிலான தகவல்களை வெளியிட்டு பாரிய அசெளகரியத்தையும் அனர்த்தத்தையும் ஏற்படுத்த மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர்பாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள் ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய
நேற்று தெரிவித்தார்.
தமக்குரிய பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி சிலர் இது போன்ற அறிவிப்புகளை விடுக்கவுள்ளதாக தெரி வித்த அவர், இவ்வாறான செயல்கள் நாட்டிற்கும், நாட்டின் தேசிய பாதுகாப் பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைய வுள்ளதுடன், நாட்டின் ஐக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கவுள்ளது என்றும் இராணுவ பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.
புலனாய்வு துறையினர் தொடர்பில் தகவல்களை வெளியிட மேற்கொண்டுள்ள முயற்சியானது மிலேனியம்சிட்டி அனர்த்தத்தின் இரண்டாவது கட்டத்தை அரங்கேற்றுவது போன்ற ஒரு விடயமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் தேசிய புலனாய்வு துறையின ருக்கு எதிராக முன்னெடுக்க திட்டமிட ப்பட்டுள்ள செயற்பாடுகள் மற்றும் முயற்சிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொள்ளுப் பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்றது.
மேற்படி மையத்தின் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் வணிகசூரிய இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், நாடு என்ற வகையில் புலனாய்வு துறையினரின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது. உலகில் சகல நாடுகளிலும் பல்வேறு பெயர்களில் புலனாய்வு துறையினர் செயற்பட்டு வருகின்றனர். அதேபோன்று சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று சகல இன மக்களும் ஐக்கியத்துடன் வாழும் எமது நாட்டிற்கும் தேசிய புலனாய்வு துறையினரின் சேவை மிகவும் முக்கியமானது.
நாட்டின் இறைமை மற்றும் ஒருமைப் பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினருடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலை புலனாய்வு தரப்பினருக்கு ஏற்படும், இவற்றை தவறாக எவரும் சித்தரிக்க முடியாது.
இந்நிலையில் சிலர் குறுகிய அரசியல் இலாபத்தையும் தமது பாராளுமன்ற சிறப்புரிமையையும் பயன்படுத்தி இவ்வாறான புலனாய்வு துறையினரின் பெயர் விபரங்களை வெளியிடவுள்ளதாக தேசப்பற்றுள்ளவர்கள் மூலம் எமது புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான முயற்சியானது மிகவும் பாரதூரமான ஒன்றாகும்.
ஏனெனில் 2002 ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி இடம்பெற்ற மிலேனியம் சிட்டி சம்பவத்தை அனைவரும் அறிவார்கள் அன்று அவ்வாறு காட்டிக் கொடுத்ததன் காரணமாகவே சுமார் 21 புலனாய்வு அதிகாரிகள் கொலை செய்யப்பட்டனர். இன்னும் அவர்களது இடத்தை நிரப்ப முடியாத நிலை காணப்படுகிறது.
புலனாய்வு தரப்பினரது பெயர் விபரங்களை வெளியிடுவதானது நாட்டிற்கு மாத்திரமன்றி சர்வதேசத்திற்கு தகவல் வழங்கும் செயற்பாடாகவே அமையும் என்றார்.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவத்தை எக்காரணம் கொண்டும் நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. அதற்காக எமது கவலையை தெரிவித்துக் கொள்கின்றோம். எனினும் இந்த சம்பவத்திற்கு பின்னர் ஏற்படவிருந்த பாரிய அசம்பாவிதங்களை எமது புலனாய்வு துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் ஒத்துழைப்புக்கள் மூலமே தவிர்க்க முடிந்தன.
எனினும் சிலர் இதனை தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக நாடளாவிய ரீதியில் கொண்டு செல்ல முயற்சித்தனர் ஆனால் அவர்களது முயற்சிகள் படுதோல்வியில் முடிந்தன.
அளுத்கம மற்றும் பேருவளையில் இடம்பெற்ற சம்பவங்களை முடிவுக்கு கொண்டு வந்தமையை தேசப்பற்றுள்ள மற்றும் அமைதியை விரும்பும் பலர் வரவேற்றுள்ள போதிலும் இந்த சம்பவத்தின் காரணமாக இந்த நாடு தீப்பற்றி எரியவில்லையே என சிலர் கவலைப்பட்டுள்ளனர் என்றார்.
அளுத்கம மற்றும் பேருவளையில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து “அங்கு நடந்தது போதாதா? இன்னும் ஏதும் செய்ய வேண்டுமா?” என்று மேற்குலக நாடொன்றின் தூதரகத்திலிருந்து வினவப்பட்டுள்ளமை தொடர்பில் புலனாய்வு துறையினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் பிரிகேடியர் இங்கு சுட்டிக்காட்டினார்.
யுத்தத்திற்கு பின்னரும் இலங்கை பூகோள அரசியல் செயற்பாடுகள் காரணமாக பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றது. புலம் பெயர்ந்தவர்கள் எமக்கு எதிராக முன்னெடுத்து வரும் செயற்பாடுகளை நாம் நினைவு படுத்தி பார்க்க வேண்டும் என்றார்.
மேற்படி அளுத்கம சம்பவம் காரணமாக முழு நாடே தீப்பற்றி எரியும், குழப்பிய குட்டையில் நாம் மீன் பிடித்துக் கொள்ளலாம் என்றும் சிலர் நினைத்தனர். எனினும் எமது புலனாய்வு பிரிவினர் விழிப்புடன் செயற்பட்டதன் காரணமாக அவர்களது எண்ணங்கள் நிறைவேற வில்லை. சில சம்பவங்களை பயன்படுத்தி நாட்டை குழப்பி அதன் மூலம் குளிர்காய்வதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறான தேசத்துரோகிகள் தொடர்பில் பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
எமது முழு பலமும் மக்கள் தான். மக்களுக்காகவே நாம் சகல வற்றையும் செய்கின்றோம். எனவே தான் மக்களை தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar