BREAKING NEWS

ஐக்கிய தேசிய கட்சியில் முட்டையிட்ட முஸ்லிம் காங்கிரஸ் தன் பெயரை இழந்து விட்டது.

HA

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டதாலேயே பாராளுமன்றத்தில் தனியான கட்சியாக அடையாளப்படுத்தப்படவில்லை என அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார்.

அதேவேளை கட்சித் தலைவர் அந்தஸ்து தொடர்பில் பாராளுமன்றில் ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ரவூப் ஹக்கீம் கடமையாற்றி வருவதாகவும் அதில் எந்தவிதமான பிரச்சினைகளும் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டதாகவும் இதனால், தனியான கட்சியாக பாராளுமன்றில் அடையாளப்படுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாகவே அண்மையில் பாராளுமன்றில் கட்சித் தலைவர் என்ற ரீதியில் விசேட உரையாற்ற பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி அனுமதியளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தற்பேதைக்கு ஆளும் கட்சியிலிருந்து பதவி விலக வேண்டிய அவசியங்கள் எதுவும் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய பொதுத் தேர்தலின் பின்னர் முஸ்லிம்களின் பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் அணுகுமறையில் சாதக மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட ரீதியான குற்றச்சாட்டுக்களுக்கு கட்சி அரசியல் ரீதியான இலக்குகளை விட்டுக் கொடுக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar