சில அரசியல்வாதிகளுக்கு தேர்தல் காலத்தில்தான் இளைஞர்களை ஞாபகத்திற்கு வருகின்றது. இன்னும் சில அரசியல் வாதிகளுக்கு நாட்டையும் சமூகத்தையும் குழப்பவே இளைஞர்கள் தேவைப் படுகிறார்கள். ஆனால், இளைஞர்களை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தி உலகுக்கு ஏற்றவாறு உருவாக்க எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார்.
நாட்டின் அபிவிருத்திக்காக இளைஞர் களின் பங்களிப்பை பெற்று நாட்டை கட்டியெழுப்புவதுடன் இளைஞர் சமுதாயத்தை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவது மிகவும் குறைவு. ஆனால், எமது நாட்டு இளைஞர்களுக்கு அவ்வாறான சந்தர்ப்பம் உருவாக்கப் பட்டுள்ளது.
இன்று நாட்டில் யுத்தமோ, பயங்கரவாதமோ கிடையாது. அதற்குப் பதிலாக கட்டியெழுப்பப்படும் நாடொன்றே உங்களுக்கு கிடைத்துள்ளது. அவ்வாறு கட்டியெழுப்பப்படும் நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பது இளைஞர்களின் பொறுப்பாகும்.
இளைஞர்களின் எழுச்சிமிக்க உணர்வை சிலர் நாட்டின் முன்னேற்றத்திற்கு அன்றி நாட்டை வீழ்த்தவே பயன்படுத்துகிறார்கள். எகிப்து முதல் உக்ரைன் வரை பல நாடுகளின் வீழ்ச்சிக்கு இளைஞர்களின் எழுச்சிமிக்க உணர்வை சிலர் தந்திரமாக பயன்படுத்துகிறார்கள்.
வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழு ப்புவதற்கு பதிலாக கட்டியெழுப் பப்பட்ட நாட்டை வீழ்த்துவதற்கு இவ்வாறான சக்திகள் இளைஞர்களை பயன்படுத்துகிறது. இன்று இளைஞர் களுக்கு உரிய சந்தர்ப்பம் வழங்கும் அரசாங்கமே உருவாகியுள்ளது. அதனைப் பயன்படுத்திக் கொள்வது இளைஞர்களின் பொறுப்பாகும்.
இதற்காக எம்மால் உகந்த சூழலையே ஏற்படுத்திக் கொடுக்க முடியும்.
இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.