ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-
கிழக்கு முஸ்லிம் அரசியலில் இன்னுமொரு முஸ்லிம் கட்சி உருவாவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் களமிறங்கவுள்ள இந்தக் கட்சி எதிர்வரும் இரு வாரங்களுக்குள் தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சுமார் மூன்று மாதங்கள் தேர்தலுக்கான தயார்படுத்தல் மற்றும் விழிப்புணர்வு கூட்டங்களையும் இந்தக் கட்சியின் மக்கியஸ்தர்கள் கிழக்கு மாகாணத்தில் விசேடமாக, அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கவுள்ளனர் என தெரிய வருகிறது.
ஓர அரசியல் குழுமமாக கட்சி ஒன்றின் பெயரில் களமிறங்கவுள்ள இவர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுயேட்சையாக அல்லது தனித்துவத்துடன் பிறிதொரு அரசியல் கட்சி ஊடாக களமிறங்கவுள்ளனர்.
இளைஞர், புத்தி ஜீவிகள், சிவில் சமூகத்தினர் முஸ்லிம் சமய முக்கியஸ்தர்களை ஒன்றிணைத்து மசூறா அடிப்படையில் எதனையும் திறந்த மனதுடன் கலந்துரையாடியே செயற்பட போவதாக இந்த புதிய கட்சியின் முக்கியஸ்தர்கள் தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
முஸ்லிம் காங்கிரஸ் உட்படலான பல்வேறு முஸ்லிம் கட்சிகளின் அதிருப்தியாளர்களையும் இந்தக் கட்சி தனக்குள் இணைந்து இணக்கப்பாடுடனான அரசியல் பயணத்தை நோக்கிச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்மாந்துறை அரசியலில் சவாலாக இருந்த மர்ஹும்களான எம்.ஏ. அப்துல் மஜீத், அன்வர் இஸ்மாயில் ஆகியோருக்கு அடுத்ததாக இந்த புதிய கட்சியின் தலைமைத்துவம் சம்மாந்துறையிலிருந்தே உருவாகவுள்ளதாகத் தெரிகிறது.
இதேவேளை, தற்போதைய கிழக்கு மாகாண அமைச்சர் மன்சூர் அவர்கள் புதிய கட்சியின் புதிய தலைமை குறித்து அச்சமடைந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.