ஜனாதிபதியின் உருவம் அச்சிடப்பட்ட ரீ சேர்ட்டை அணிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மறுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது..
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் பேருவளையில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கின் போதே அமைச்சர்களுக்கு அணியக் கொடுத்த ஜனாதிபதியின் உருவம் அச்சிடப்பட்ட ரீ சேர்ட்டை அணிய அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மறுத்துள்ளார்.
அதனை அணிய மறுத்த அவர், தான் சீருடைகளை அணிய விரும்புவதில்லை எனவும் சீருடைகளை அணிந்தால் கட்டளைகளுக்கு அடிபணிய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
அத்துடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் இதன்போது அவர் கூறியுள்ளார்.
அதேவேளை இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட அமைச்சர் ஒருவரின் நடத்தை குறித்து ஜனாதிபதி அவருக்கு எச்சரித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.