பொதுபல சேனா அமைப்பை தடை செய்யக் கூடாது என அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“பொதுபல சேனா தடை செய்யப்படுமானால், தவ்ஹித் ஜமாத் போன்ற அமைப்புகளும் தடை செய்யப்பட வேண்டும்.
ஆனால் இந்த அமைப்புகளை ஒருபோதும் தடை செய்யக் கூடாது. அப்படி தடை செய்தால், இந்த அமைப்புகள் பொய்யான வீரத்தை பெற்றுக் கொள்ளும். அதற்கு இடமளிக்க கூடாது” எனவும் அமைச்சர் வீரவன்ஸ கூறியுள்ளார்.