BREAKING NEWS

ஈராக் ஐசிஸ் தலைவர் அல் பக்தாதி முதல்முறை வீடியோவில் தோற்றம்

'Sheea பள்ளிவாசல்கள் தகர்த்தழிப்பு
உலக முஸ்லிம்களின் கலீபாவாக அல்லது தலைவராக அறிவித்துக் கொண்ட ஈராக் இஸ்லாமிய தேசம் (ஐசிஸ்) போராளிகளின் தலைவர் அபு+ பக்கர் அல் பக்தாதி, தோன்றும் முதல் வீடியோ வெளியாகியுள்ளது.

ஈராக்கின் மொசூல் நகரின் பெரிய பள்ளிவாசலில் அல் பக்தாதி கடந்த வெள்ளிக்கிழமை ஜ{ம்மா பிரசங்கம் செய்யும் வீடியோவே சமூக இணை யத்தளங்கள் ஊடே வெளியாகி யுள்ளது. ஒரு கறுப்பு தலைப்பாகை மற்றும் சால்வையை போர்த்திய வாறு 15 நிமிடங்கள் கொண்ட பிரசங்கத்தில் பக்தாதி, புனித ரம ழான் மாதம் குறித்து தமது வாழ்த் துகளை வெளியிடுவதோடு, ஒடுக்கு முறைக்கு எதிராக இறைவனின் வழியில் போராடுவதன் நியாயங்கள் பற்றியும் விளக்கியுள்ளார்.
ஜpஹாத்திக்கள் இறைவனின் உத வியோடு கிளாபத்தை நிறுவியது மற்றும் இஸ்லாமிய சட்டத்தை அமைப்பதன் தேவை பற்றி அவர் அல் குர்ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி விளக்கியுள்ளார். "கலீபத்தை நிறுவுவது ஒரு கடமையாகும்" என்று குறிப்பிட்ட அவர், "'ரியா நிறுவப்படும்வரை மதத்திற்கு இடமில்லை" என்றார்.
ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் கணிசமான நிலத்தை கைப்பற்றிய ஐசிஸ் கிளர்ச்சி யாளர்கள் சிரியா மற்றும் ஈராக்கை உள்ளடக்கியதாக கடந்த வாரம் புதிய இஸ்லாமிய தேசத்தை பிரகட னப்படுத்தினர். ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி மற்றும் அவரது 'pயா மேலாதிக்கம் கொண்ட அரசினால் சுன்னி முஸ்லிம்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படும் சூழலிலேயே அங்கு சுன்னி கிளர்ச்சியாளர்கள் முன்னேற் றம் கண்டுள்ளனர்.
இதில் அல் பக்தாதி தோன்றும் முதலாவது வீடியோவாக மேற்படி வீடியோ கருதப்படுகிறது. இதற்கு முன்னர் இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு வேறு பெயர் ஒன்றில் வீடி யோவில் தோன்றியிந்ததாக இஸ் லாமிய அமைப்புகள் தொடர்பான நிபுணரான அய்மன் அல் தமீமியை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.
"நான் உங்கள் தலைவன். ஆனால் நான் உங்களில் சிறந்த வனல்ல. எனவே, நான் தவறென்று நீங்கள் கண்டால் எனக்கு அறிவுரை வழங்கி நல்வழிப்படுத்துங்கள். நான் இறைவனுக்கு கீழ்படியும்வரை நீங் கள் எனக்கு கீழ்ப்படியுங்கள்" என்று அல் பக்தாதி தமது பிரசங்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வெளியிடப்பட்டிருக்கும் இந்த வீடியோ குறித்து சுயாதீனமாக உறுதிசெய்ய முடியவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட் டுள்ளன. எனினும் இந்த வீடியோ வின் விளக்கத்தில் பக்தாதியை "கலீபா இப்ராஹிம்" என்று குறிப் பிடப்பட்டுள்ளது. தம்மை கலீபாவாக பிரகடனப்படுத்திய பின் பக்தாதி தமது பெயரை இப்ராஹிம் என்று அறிவித்துக் கொண்டமை குறிப்பிடத் தக்கது.
இதேவேளை ஈராக்கின் இரண்டா வது மிகப்பெரிய நகரான மொ சூலை கட்டுப்பாட்டில் வைத்திருக் கும் ஜpஹாதிக்கள் அங்குள்ள வழி பாட்டு தலங்கள் மற்றும் பள்ளிவா சல்களை இடித்து தகர்த்துள்ளனர். இதில் குறைந்தது நான்கு சூபித் தலைவர்களின் அடக்கஸ்தலங்களும் ஆறு 'pயா பள்ளிவாசல்களும்; தரைமட்டமாக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டுள்ளது.
ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் இணை யத் தளத்தினூடே வெளியிட் டிருக்கும் புகைப்படங்களில் சுன்னி மற்றும் சூபிக்களின் சியாரங்கள் புல்டோசர் கொண்டு அழிக்கப்படு வதும் 'pயா பள்ளிவாசல்கள் அழிக ;கப்படுவதும் காண்பிக்கப்பட்டுள்ளன. "நினெவாஹ் மாகாணத்தில் இருக் கும் விக்கிரகங்கள் மற்றும் சியா ரங்கள் அழிக்கப்படுகின்றன" என்று மேற்படி புகைப்படங்களுக்கு விளக் கம் அளிக்கப்பட்டுள்ளன.
கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டில் இருக்கும் குடியிருப்பாளர்களும் வழி பாட்டு தலங்கள் அழிக்கப்படுவதை உறுதி செய்துள்ளனர். ஆயுத தாரிகள் இரு தேவாலயங்களையும் ஆக்கிரமித்திருப்பதாக அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
"எமது பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து மரபு வழியாக வரும் இந்த புனிதத்தலங்கள் அழிக்கப்பட்டதையிட்டு நாம் கவலை யடைகிறோம்" என்று மொசூல் நகர குடியிருப்பாளரான 51 வயது அஹமட் என்பவர் குறிப்பிட்டுள்ளார். "அவர்கள் நகரத்தில் ஸ்திரமடைந்து விட்டார்கள்" என்றும் அவர் விபரித்துள்ளார்.

ஐசிஸ் 'கலீபத்'' கடவுச்சீட்டு விநியோகம்

ஈராக் மற்றும் சிரியாவின் நிலப்பகுதியை கைப்பற்றி புதிய கலீபத் அல்லது இஸ்லாமிய பேரரசை அறிவித்த ஐசிஸ் என அழைக்கப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் போராளிகள் தமது நிலப்பகுதிக்கான புதிய கடவுச்சீட்டை அறிமுகம் செய்துள்ளனர். பச்சை நிறத்திலான இந்த கடவுச்சீட்டின் மேற்பகுதியில் "இஸ்லாமிய கலீபத் தேசம்" என்று பொறிக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ் பாகத்தில் "கடவுச்சீட்டு வைத்திருப்பவருக்கு தீங்கு ஏற்படுமாயின் அவரது சேவைக்கு படையினர் நிறுத்தப்படும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஈராக் மற்றும் சிரிய எல்லையில் இருக்கும் 11,000 பிரiஜகளுக்கு இந்த கடவுச்சீட்டு விநியோகிக்கப்படவிருப்பதாக ஐசிஸ் செய்திகள் குறிப்பிடுகின்றன. கடந்த 2011 ஆம் ஆண்டு மொசூல் நகரில் கட்டப்பட்ட அச்சகத்தின் மூலமே இந்த கடவுச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar