BREAKING NEWS

ஐசிஸ் போராளிகள் சவூதி மீது எறிகனை தாக்குதல்!



ISIS
சவுதி அரேபியாவின்; வடகிழக்கு அரார் எல்லைப் பகுதிக்கு ஈராக்கில் இருந்து பல எறிகணைகள் விழுந்துள்ளன.

வடகிழக்கு எல்லைப் பகுதியில் குடியிருப்பு கட்டிடம் ஒன்றுக்கு அருகில் மூன்று எறிகணை தாக்குதல்கள் இடபெற்றுள்ளன. எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று சவுதி எல்லைப் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ஏ.எப்.பி. செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
இந்த எறிகணை தாக்குதல் குறித்து சவுதி அரேபியா உடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஈராக்கில் ஐசிஸ் எனப்படும் ஈராக் இஸ்லாமிய தேசம் படையினர் நாட்டின் கணிசமான நிலப்பகுதியை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு யுத்த பதற்றம் நீடித்து வருகிறது. ஐசிஸ் போராளிகளுக்கு சவுதி உதவுவதாக ஈராக் பிரதமர் நூரி அல் மலிக்கி கடந்த மாதம் குற்றம் சுமத்தியிருந்தார்.
கடந்த மூன்று தினங்களுக்குள் சவுதி எல்லையில் நடத்தப்படும் இரண்டாவது தாக்குதல் இதுவாகும். முன்னதாக சவுதியின் தெற்கு எல்லையான அல் ‘வ்ரூரா மீது யெமனை மையமாகக் கொண்ட அல் கொய்தா ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் பாரிய முன்னேற்றம் கண்டதை அடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்படி சவுதி மன்னர் அப்துல்லாஹ் கடந்த வாரம் உத்தரவிட்டி ருந்தார்.
இஸ்லாமிய கிளாபத் அல்லது பேரரசை அறிவித்த ஐசிஸ் கிளர்ச்சியாளர்கள் தமது பேரர சுக்குள் சவுதியையும் உள்ளடக் கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar