BREAKING NEWS

அரச சார்­பற்ற அமைப்­புக்கள் மீதான அர­சாங்­கத்தின் கெடு­பிடி!


NGO
இலங்­கைக்குள் இயங்கும் அனைத்து உள்­நாட்டு மற்றும் வெளிநாட்டு அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளி­னது அனைத்து வித­மான ஊடக செயற்­பா­டு­க­ளையும் உடன் அமு­லுக்கு வரும் வகையில் அரசாங்கம் தடை செய்­துள்­ளது. இதற்­கான உத்­த­ர­வினை பாது­காப்பு அமைச்சு வழங்­கி­யுள்­ளது.

பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் அர­சாங்­கத்தின் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கான செய­ல­கத்தின் ஊடாக ஜூலை 1 ஆம் திகதி இடப்­பட்டு அனைத்து அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கும் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள சுற்­ற­றிக்­கை­யூ­டா­கவே இந்த தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.
அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் தொடர்­பாக செய­ல­கத்தின் பணிப்­பாளர் டி.எம்.எஸ். திஸா­நா­யக்க கையொப்­ப­மிட்டு அனுப்­பி­வைத்­துள்ள இந்த அறிக்­கையில் தடை குறித்து தெளிவு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­புக்­களை நடத்­துதல், ஊட­க­வி­ய­லா­ளர்­களை பயிற்­று­விக்கும் பயிற்­சிப்­பட்­ட­றை­களை நடத்­துதல் மற்றும் ஊடக அறிக்­கை­களை வெளியி­டுதல் போன்ற நட­வ­டிக்­கைகள் இதன் மூலம் தடை செய்­யப்­பட்­டுள்­ளன.
இவ்­வா­றான செயற்­பா­டுகள் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்­கு­ரிய நட­வ­டிக்­கை­க­ளுக்கு அப்­பாற்­பட்­டது. இதனால் இத்­த­கைய செயற்­பா­டு­களை உட­ன­டி­யாக கைவி­டு­மாறு இந்த சுற்­­ற­றிக்­கையில் கோரப்­பட்­டுள்­ளது.
நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்­ப­கு­தியில் அர­சசார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்­க­மா­னது கடும் கட்­டுப்­பாடு விதித்­தி­ருந்­தது. நாட்டில் அரச சார்­பற்ற நிறு­வ­ன­மொன்று செயற்­ப­ட­வேண்­டு­மாயின் அதற்கு பல விதி­மு­றை­களை அர­சாங்கம் கொண்டு வந்­தி­ருந்­தது. இதனால் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் சுதந்­தி­ர­மாக இயங்­க­மு­டி­யாத சூழல் அன்று ஏற்­பட்­டி­ருந்­தது. யுத்தம் 2009 ஆம் ஆண்டு முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட பின்னர் இந்த அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் விட­யத்தில் அப்­போ­தி­ருந்­த­தை­விட சிறி­த­ளவு தளர்­வு­ப்போக்கு கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.
இலங்கை போன்ற அபி­வி­ருத்தி அடைந்து வரும் நாடு ஒன்­றுக்கு சர்­வ­தேச அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பாடு என்­பது அவ­சி­ய­மாக உள்­ளது. இலங்­கையில் பல்­வேறு நாடு­க­ளைச்­சேர்ந்த அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு பல்­வேறு உத­வி­களை செய்­துள்­ளன. இறுதி யுத்­தத்தின் போது இலட்­சக்­க­ணக்­கான மக்கள் வன்­னி­­யி­லிருந்து இடம் பெயர்ந்து வவு­னி­யா­விற்கு வருகை தந்த போது அர­சாங்­கத்­தினால் அந்த மக்­க­ளுக்­கான உரிய சேவை­களை முழு­மை­யாக வழங்க முடி­யாத நிலை காணப்­பட்­டது.
இந்த நிலையில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் பணி பெரும் உத­வி­யாக அமைந்­தி­ருந்­தது. நாட்டில் சுனாமி அனர்த்தம் ஏற்­பட்டு 40 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட உயிர்கள் பலி­யாகி பெரு­ம­ள­வான சொத்­துக்கள் அழித்­தொ­ழிக்­கப்­பட்ட நிலையில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களே இந்த சேதங்­களை மீளவும் கட்­டி­யெ­ழுப்ப பெரும் உதவி புரிந்­தி­ருந்­தன. தற்­போது யுத்தம் முடி­வ­டைந்து ஐந்து வரு­டங்கள் ஆகி­விட்ட நிலையில் நாட்டில் செயற்­பட்டு வரும் சர்­வ­தேச மற்றும் உள்ளூர் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் தடை­களை விதிப்­ப­தா­னது நாட்­டுக்கு அவப்­பெ­யரைக் கொண்­டு­வரும் விட­ய­மா­கவே அமை­கின்­றது.
அமெ­ரிக்க அர­சாங்­கத்தின் யூ.எஸ்.எயிட் நிறு­வ­னத்தின் உத­வித்­திட்­டத்தின் கீழ் நடத்­தப்­ப­ட­வி­ருந்த வாக்­காளர் கல்­வி­யூ­டாக தேர்தல் ஒத்­து­ழைப்பு என்ற தொனிப்­பொரு­ளி­லான தேர்தல் நட­வ­டிக்­கைகள் மற்றும் வாக்­கு­ரிமை தொடர்­பி­லான நாட்­டு­ மக்­க­ளுக்கு தெளிவு­ப­டுத்­து­வ­தற்­கான நிகழ்ச்சி திட்­டத்­திற்கும் அர­சாங்­க­மா­னது கடந்­த­வாரம் கடும் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்­தது.
அமைச்­ச­ர­வைக்­கூட்­டத்தில் இந்த விவ­காரம் ஆரா­யப்­பட்டு கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து யூ.எஸ்.எயிட் நிறு­வ­ன­மா­னது வாக்­கா­ளர்­களை அறி­வூட்டும் இந்த நிகழ்ச்சித் திட்­டத்தை இரத்துச் செய்­வ­தாக அறி­வித்­துள்­ளது. இந்த அறி­விப்பு வெளியா­கி­யுள்ள நிலையில் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மீதான அர­சாங்­கத்தின் கெடு­பி­டியும் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளது.
அரச சார்­பற்ற நிறு­வ­னங்­களின் ஊட­க­செ­யற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்­க­மா­னது தடை விதித்­துள்­ளமை தொடர்பில் ஐ.நா. சபையும் கவனம் செலுத்­தி­யுள்­ளது. இந்த விடயம் குறித்து ஆராய்ந்து வரு­வ­தாக ஐ.நா. செய­லாளர் நாய­கத்தின் பேச்­சாளர் கருத்து தெரி­வித்­துள்ளார்.
இத­னை­விட அர­சாங்­கத்தின் இந்தத் தடை­யினை பல்­வேறு அமைப்­புக்­களும் கண்­டித்­துள்­ளன. இந்தத் தடை உத்­த­ர­வா­னது பரி­க­சிக்கத் தக்­கது என்­ப­துடன் மிகவும் பயங்­க­ர­மா­னது என்று இலங்கை உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் கண்­டித்­துள்­ளது.
இந்த தடை­யா­னது இலங்­கையின் அர­சியல் அமைப்பில் மிகத் தெளிவாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்ள கருத்து சுதந்­திரம் மீது தொடுக்­கப்­பட்­டுள்ள மோச­மான தாக்­கு­த­லாகும். அத்­துடன் இந்த தடை இலங்­கை­யா­னது சர்­வா­தி­காரப் போக்கில் சென்று கொண்­டி­ருப்­பதை தெளிவு­ப­டுத்­து­கின்­றது. இந்த நட­வ­டிக்கை கார­ண­மாக நாம் மிகவும் குழப்­ப­ம­டைந்­துள்­ளோம். இந்த நட­வ­டிக்­கையை நாம் கண்­டிக்­கின்றோம் என்றும் உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் விடுத்­துள்ள கண்­டன அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு செய்­தி­யாளர் மாநா­டு­களை, செய­ல­மர்­வு­களை, ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான பயிற்­சி­களை, ஊடக அறிக்­கை­களை வெளியி­டு­வ­தற்கு உரிமை இல்­லை­யென பாது­காப்பு அமைச்சு கரு­து­வது அர­சாங்­கத்தின் தடை மூலம் அம்­ப­ல­மா­கின்­றது. ஜன­நா­யக விழு­மி­யங்­களை மதிக்கும் சகல அர­சு­களும் இவ்­வா­றான சட்­ட­பூர்­வ­மான செயற்­பா­டு­களில் தமது பிர­ஜைகள் ஈடு­ப­டு­வ­தற்கு உள்ள உரி­மையை மதிக்­கின்­றன. சர்­வா­தி­கார அர­சுகள் மாத்­திரம் இதனைத் தடுக்­கின்­றன. இலங்கை அரசு தனது ஜன­நா­யக இயல்­பு­களை பாது­காக்க விரும்­பினால் கருத்து சுதந்­திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்­திரம் போன்­ற­வற்றை அனு­ம­திக்­க­வேண்டும் என்று சட்­டத்­த­ர­ணிகள் கூட்­ட­மைப்பு சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.
இதேபோல் அரசு சார்­பற்ற நிறு­வ­னங்கள் பலவும் அர­சாங்­கத்தின் தடை தொடர்பில் அதிர்ச்சி வெளி­யிட்­டுள்­ளன. அண்­மையில் அரசு சார்­பற்ற நிறு­வ­ன­மான ட்ரான் பேரன்ஸி இன்டர் நெஷனல் என்ற அமைப்பின் இலங்கைக் கிளை நடத்­திய ஊடகப் பட்­ட­றைகள் திட்­ட­மிட்ட வகையில் குழப்­பப்­பட்­டி­ருந்­தன. நீர்­கொ­ழும்பு மற்றும் தம்­புள்­ளைப்­ப­கு­தி­களில் இந்த அமைப்­பா­னது கடந்த மாதமும் அதற்கு முன்­னைய மாதமும் ஊடக பயிற்­சிப்­பட்­ட­றை­களை நடத்­தி­யி­ருந்­தது. இந்தப் பயிற்சிப் பட்­ட­றைகள் இடம்பெற்ற ஹோட்­டல்­க­ளுக்கு முன்னால் பௌத்த பிக்­குகள் தலை­மை­யி­லான குழு­வினர் ஆர்ப்­பாட்­டங்­களைச் செய்து இந்தப் பட்­ட­றை­களை இடை­ந­டுவில் குழப்­பி­யி­ருந்­தனர்.
இந்தப் பயிற்சிப் பட்­ட­றை­களில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த பத்­தி­ரி­கை­யா­ளர்கள் பலரும் பங்­கு­பற்­றி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும். வெளி­நாட்டு நிதியில் நாட்­டுக்கு எதி­ராக சூழ்ச்சிகளை மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே இந்தப் பயிற்சிப்பட்டறை நடத்தப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்கள் நடத்திய மாநாடுகள், ஊடகவியலாளர்களின் செயலமர்வுகள் திட்டமிட்டவகையில் குழப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அமைப்புக்களின் ஊடக செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை முன்னர் இடம் பெற்ற எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்தின் தற்போதைய முடிவுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.
அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதான அரசாங்கத்தின் கடும் போக்கு செயற்பாடானது சர்வதேச ரீதியில் மேலும் நாட்டுக்கான அழுத்தத்தையே அதிகரிக்கும். எனவே, இந்த விடயத்தில் சிந்தித்து செயலாற்றவேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
@வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar