ஐ ஏ காதிர்கான்
இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்துவது எப்போதும் தோல்வியிலேயே முடியும் என கொழும்பு மாநகர மேயர் ஏ. ஜே எம் முஸம்மில் குறிப்பிட்டார். கொழும்பு பள்ளிவாசல்கள்
பலவற்றுக்கு மாநகர சபையால் நிதியுதவிகள் வழங்கப்பட்ட வைபவத்தின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
இந்த நாட்டில் 30 வருட கால யுத்தம் நடந்தது. தமிழீழத்துக்கு முஸ்லிம்கள் ஆதரவு தெரிவிக்காத ஒரே காரணத்துக்காக வடமாகாண முஸ்லிம்கள் பிரபாகரனால் 24 மணி நேரத்துக்குள் வெளியேற்றப்பட்டனர். அன்று முஸ்லிம்கள் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டிருந்தால் இன்று முஸ்லிம்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஆனாலும் இன்று இது மறக்கப்பட்டு விட்டது.
முஸ்லிம்கள் கிழக்கில் பிரபாகரனுடன் இணைந்து ஆயுத போராட்டம் நடத்தியிருந்தால் இந்த நாட்டின் வரலாறே மாறியிருக்கும். இன்று இந்த நாடு இரண்டாக பிளவு பட்டிருக்கும்.
எமது முஸ்லிம்கள் ஒரு போதும் ஈழம் கேட்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கெதிராக சதி நடக்கிறது. எமது நாட்டுக்கு அதிகளவு நிதிகள் கிடைப்பது முஸ்லிம் நாடுகளிலிருந்தேயாகும்.
ஆகவே நாட்டில் இனமத மோதல்கள் உருவாகாமல் ஐக்கியமாக வாழ்வதற்கான முயற்சிகளை சகலரும் முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.