BREAKING NEWS

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவரினால் மரண அச்சுறுத்தல்

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை குச்சவெளி பிரதேச சபை தலைவரினால் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை செய்தியாளர் ஏ.எல் .ரபாய்தீன் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இது குறித்து தெரியவருவதாவது கடந்த நாட்களில் செய்தி பத்திரிகை ஒன்றில் வெளியான செய்திக்காக செய்தியாளர் ஏ.எல் .ரபாய்தீன் பாபுவை மூன்று நாட்களுக்குள் கொலை செய்வதாக கூறியே குச்சவெளி பிரதேச சபைத்தலைவர் ஏ.முபாரக் தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்ததாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தியாளர் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் தற்போதைய பொருளாளரும் ஆவார்.

Share this:

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar