BREAKING NEWS

தீவிரவாதத்திற்கு எதிராக சவ+தி 100 மில்லியன் டொலர் நிதியுதவி

சர்வதேச தீவிரவாதத்திற்கு எதி ரான மையத்திற்கு சவு+தி அரேபியா 100 மில்லியன் டொலர் நிதியுத வியை வழங்கியுள்ளது. இதற்கான காசோலை ஐ.நா. பொதுச் செய லாளர் பான் கீ மூனிடம் வழங்கப் பட்டுள்ளது.
இந்த நிதியுதவியை தனது அலுவலகத்தில் வைத்து பெற்றுக் கொண்ட பான் கீ மூன், பல நாடுகள் மற்றும்
பிராந்தியங்களில் தீவிரவாதம் எழுச்சி பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.
குறிப்பாக இஸ்லாமிய தேசம் குழு சிரியா மற்றும் ஈராக்கில் குறிப்பிடத் தக்க நிலப்பகுதியை கைப்பற்றிய நிலையில் நாம் பாரிய சவாலை எதிர்நோக்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நாவுக்கான சவ+தி அரேபிய தூதுவர் அப்தல் அல் ஜ{பை இந்த காசோலையை வழங்கிவைத்து குறிப்பிடும்போது, தீவிரவாதம் ஒரு தீய கொடியசக்தி என்றும் நாம் அனைவரும் பாதிக்கப்பட்டிருப்பதாக வும் தெரிவித்தார்.
சவு+தி மன்னர் அப்துல்லாஹ் 10 ஆண்டுகளுக்கு முன் தீவிர வாதத்திற்கு எதிரான சர்வதேச மையத்தை அமைக்க அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு சவ+தி மன்னரின் 10 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் ஐ.நா. நியு+யோர்க் தலைமையகத்தில் இந்த மையம் நிறுவப்பட்டது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar