BREAKING NEWS

காசாவில் மேலும் ஐந்து தினங்களுக்கு யுத்த நிறுத்தம் அமுல்


எகிப்தில் இஸ்ரேல்-பலஸ்தீன் சமரச பேச்சு தொடர்கிறது
காசாவில் மேலும் ஐந்து தினங்களுக்கு யுத்த நிறுத்தத்தை நீடிப்பதற்கு இஸ்ரேல்-பலஸ்தீன பிரதிநிதிகளுக்கு இடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் இரு தரப்புக்கும் இடையில் சிறு தாக்குதல்
சம்பவங்கள் இடம்பெற்றதை அடுத்தே இந்த யுத்த நிறுத்தம் நேற்று வியாழக்கிழமை தொடக்கம் அமுலுக்கு வந்தது.
மறுபுறத்தில் இரு தரப்புக்கும் இடையில் நீண்ட கால தீர்வொன்றை பெறுவதற்காக கெய்ரோ சமரச பேச்சுவார்த்தையில் இது வரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
முந்தைய மூன்று நாள் யுத்த நிறுத்தம் கடந்த புதன்கிழமை நள்ளிரவு காலா வதியாவதற்கு சற்று முன்னர் புதிய யுத்த நிறுத்தத்திற்கான உடன்பாடு எட்டப்பட் டுள்ளது. "பேச்சுவார்த்தைக்கு மேலும் கால அவகாசம் பெறுவதற்கு இணக்கம் ஏற்பட்டது" என்று கெய்ரோவில் இருக்கும் பலஸ்தீன பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அஸ்ஸாம் அல் அஹமத் குறிப்பிட்டார். இந்த மேலதிக தினம் ஐந்து நாட்களாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் நேற்று அதிகாலை யாகும்போது இரு தரப்புக்கும் இடையில் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
ஐந்து நாள் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில் பலஸ்தீனர் தரப்பில் இருந்து நடத்தப்பட்ட இரு ரொக்கொட் தாக்குதல்கள் தெற்கு இஸ்ரேலில் விழுந் துள்ளது.
ஆனால் யுத்த நிறுத்தம் நீடிக்கப்பட்டு சுமார் 30 நிமிடங்களுக்குள் இஸ்ரேல் காசா மீது நான்கு வான் தாக்குதல்களை நடத்தியதாக பலஸ்தீன உள்துறை அமைச்சு அறிவித்தது. பலஸ்தீன ரொக்கெட் தாக்கு தலுக்கு பதிலாகவே இந்த வான் தாக்கு தல்களை நடத்தியதாக இஸ்ரேல் குறிப்பிட்டிருந்தது.
இஸ்ரேல் தெற்கு காசாவின் கான் யு+னிஸ் உட்பட பல பகுதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் இந்த தாக்குதல் சம்பவங்களால் எந்த சேதமும் பதிவாகவில்லை.
"இராணுவம் அவதானத்துடனும் தற்பாது காப்பு மற்றும் தாக்குதல் திறனுடனும் தயா ராகவே வைக்கப்பட்டுள்ளது. இஸ்ரே லுக்கான எந்த அச்சுறுத்தலுக்கும் உடன் பதில் கொடுக்க தயாராகவே இருக்கிறோம்" என்று இஸ்ரேல் இராணுவம் அறிவித்தது.
இந்த தாக்குதல்களுக்கு பின் நேற்றுக் காலை மோதல்கள் தணிந்தன. அதிகாலை 3 மணிக்கு இஸ்ரேல் வான் தாக்குதலை நடத்தியதை அடுத்து எந்த மோதலும் தொடரவில்லை என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஜ{லை 8 ஆம் திகதி காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் ஆரம்பமானது தொடக்கம் இதுவரை 1,960க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் அதிகப் பொரும்பான்மையானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர். மறுபுறத்தில் இஸ்ரேல் தரப்பில் 64 இராணுவத்தினரும் மூன்று சிவிலியன்களும் கொல்லப்பட்டனர்.
எகிப்து மத்தியஸ்தர்கள் ஊடாக இஸ்ரேல்-பலஸ்தீன தரப்புகள் நீண்டகால யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு கெய்ரோ நகரில் முயற்சித்து வருகின்றனர். யுத்த நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து தொடர்ந்தும் மறைமுகப் போச்சுவார்த்தையை தொடர இரு தரப்பும் எதிர்பார்த்துள்ளன.
"விரிவான உடன்பாடொன்று எட்டப்பட்ட தன் மூலம் சாதகமான சூழல் ஒன்று நிலவி வருகிறது" என்று பலஸ்தீன பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அஸ்ஸாம் அல் அஹ்மத் சுட்டிக்காட்டினார். "எனினும் பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறி நிலையிலேயே உள்ளது" என்றும் தெரிவித்தார்.
இருதரப்பினரதும் பிரதான கோரிக்கைகள் இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கு சாத்திய மில்லாதவையாக காணப்படுவதாக அவ தானிகள் குறிப்பிடுகின்றனர்.
காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பு ஆயுதத்தை கலைய வேண்டும் என்றும் காசா இராணுவ மயமற்ற பகுதியாக மாறா வேண்டும் என்றும் இஸ்ரேல் நிபந்தனை விதிக்கிறது.
கெய்ரோவில் இருக்கும் ஹமாஸ் உட்பட பலஸ்தீன பிரதிநிதிகள் குழு, காசா மீது இஸ்ரேல் முன்னெடுத்துவரும் பொருளாதார முற்றுகையை அகற்ற வேண்டும் என்றும் மீன்பிடிக்கும் பகுதியை விரிவுபடுத்த வேண் டும் என்றும் காசாவில் விமானநிலையம் மற்றும் துறைமுகத்தை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் இஸ்ரேல் சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றும் கோருகின்றது.
இதில் காசாவுக்கான இஸ்ரேல் எல்லைக் கடவையை திறப்பது, சுதந்திர மீன்பிடி வலயம் ஒன்றை அமைப்பது மற்றும் பல்வேறு பாதுகாப்பு விடயங்கள் குறித்து இன்னும் இணக்கம் ஏற்படவில்லை என்று பலஸ்தீன குழுவின் தலைவர் அல் அஹ்மத் புதன்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
நீண்டகால உடன்பாட்டுக்கான ஒருசில விடயங்களில் இணக்கம் ஏற்பட்டதாக கெய்ரோவில் இருக்கும் ஹமாஸ் அதிகாரி இஸ்ஸத் அல் ர'pக் நேற்று தெரிவித்திருந்தார். எனினும் விரிவான தீர்வொன்றுக்கு மேலதிக காலம் தேவைப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
"காசாவில் விமானநிலையம், துறைமுகம் திறக்கும் எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். எனவே அனைவருக்குமான முற்றுகையை விடுவிக்க முடியும்" என்று ர'pத் குறிப்பிட்டுள்ளார். கெய்ரோவில் இருக்கும் ஹமாஸ் பிரதிநிதிகள் குழு நேற்று கட்டார் தலைநகர் டொஹாவுக்கு சென்று ஆலோசனைகளை மேற்கொள்ளவிருந்தனர்.
1967 ஆம் ஆண்டு காசாவை ஆக்கிரமித்த இஸ்ரேல் 2005 ஆம் ஆண்டு தமது துருப்புகள் மற்றும் குடியேற்ற வாசிகளை அங்கிருந்து அகற்றிக்கொண்டது. எனினும் காசாவை இஸ்ரேல் தரை, வான் மற்றும் கடல் என அனைத்து வகையிலும் தனது கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar