BREAKING NEWS

தேர்தல் வந்ததும் என்னமாய் அக்கறை.. பதுளை, மொனராகலை மாவட்ட அபிவிருத்திக்கு 5,179.8 மில். ஒதுக்கீடு


கிராமிய மக்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் வகையில் சிறந்த சுபீட்சமான எதிர்காலத்தை அவர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்காக பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் அபிவிருத்திப் பணிகளுக்காக அரசாங்கம் 5,179.8 மில்லியன் ரூபா நிதியை செலவிடத் தீர்மானித்துள்ளது.
இந்த வகையில்
இரண்டு மாவட்டங்களிலுமுள்ள 26 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள 886 கிராமசேவகர் பிரிவுகளை உள்ளட க்கியதாக அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள இந்த நிதி ஒதுக்கப் படவுள்ளது.
இதனூடாக இக்கிராமப்புற மக்களுக்கு பாரிய சேவைகளைப் பெற்றுக் கொடுக்க முடியுமென அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 567 கிராம சேவகர் பிரிவுகளும் உள்ளதுடன் மொனராகலை மாவட்டத்தின் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் 319 கிராமசேவகர் பிரிவுகள் உள்ளன.
இவற்றை உள்ளடக்கியதாகவே இந்த அபிவிருத்திச் செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புறங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த அபிவிருத்திகளை கிராமிய பிரதேசங்களுக்கும் எடுத்துச் சென்று நகர்ப்புற மக்கள் அனுபவிக்கும் சகல வசதி வாய்ப்புக்களையும் கிராமிய மக்களும் பெற்று அனுபவிக்க வேண்டு மென்பதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் நோக்கமாகும். இதற்கிணங்கவே தற்போதைய அரசாங்கம் செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த வகையில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களும் சமமான முறையில் அபிவிருத்திக்குள்ளாக் கப்பட்டு வருகின்றன.
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு அரசாங்கம் 3,246 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன் ‘வெல்லஸ்ஸவின் புத்தெழுச்சி’ செயற்திட்டத்திற்கு 1,478 மில்லியன் ரூபாவும் தேசிய வேலைத்திட்டங்களுக்காக 180 மில்லியன் ரூபாவும் அத்துடன் வரவு செலவுத் திட்டத்தின் மூலமும் 40 மில்லியன் ரூபாவை அரசு ஒதுக்கியுள்ளது.
‘கம நெகும’ கிராமிய எழுச்சி திட்டத்திற்காக 840 மில்லியன் ரூபா நிதியும் வன ஜிவராசிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 70 மில்லியன் ரூபா நிதியும் சுகாதார செயற்திட்டங்களை மேம்படுத்தும் வகையில் 54 மில்லியன் ரூபா நிதியும் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனை கருத்திட்டங்களுக்காக 175 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட் டுள்ளது.
இதற்கு மேலதிகமாக உள்ளூராட்சிச் சபைகளுக்கூடாக 270 மில்லியன் ரூபா நிதியும் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் மூலம் 139 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வகையிலேயே பதுளை மாவட்டத்தின் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.
மொனராகலை மாவட்ட அபிவிருத் திக்காக 1,933.8 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ‘வெல்லஸ்ஸவின் புத்தெழுச்சித் திட்டத்துக்காக 763.6 மில்லியன் ரூபா நியும் ‘திவிநெகும’ வாழ்வெழுச்சித் திட்டத்திற்காக 81.2 மில்லியன் ரூபா நிதியும் வரவு செலவு திட்டத்தின் மூலம் 25 மில்லியன் ரூபா நிதியும், கிராம எழுச்சித் திட்டத்திற்காக 483 மில்லியன் ரூபா நிதியும் வன ஜிவராசிகள் பாதுகாப்புக்காக 90 மில்லியனும் சுகாதார செயற்திட்டங்களுக்காக 40 மில்லியன் ரூபா நிதியும் மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனை கருத்திட்டங் களுக்காக 100 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.இதற்கு மேலதிகமாக உள்ளூராட்சிச் சபை நிறுவனங்களிற்கூடாக 140 மில்லியன் ரூபா நிதியும் விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கூடாக 211 மில்லியன் ரூபா நிதியும் ஒதுக்கப்பட் டுள்ளன.
இந்த மொத்த நிதியும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் ஒதுக்கப்பட் டுள்ளதுடன் மக்களுக்கான அபிவிருத்தியை துரிதப்படுத்தும் எதிர்பார்ப்பிலேயே இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
குறுகிய காலத்தில் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்து வருவதாகவும் பிராந்திய மட்டத்தில் துரித அபிவிருத்தியடைந்து வரும் நாடாக திகழ்வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். 

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar