BREAKING NEWS

பொத்துவில் கிராமத்தான் கலீபாவின் “நழுவி” எனும் கவிதை நூல்

(அஸ்ரப் ஏ சமத்)

பொத்துவில் கிராமத்தான் கலீபாவின் “நழுவி” எனும் கவிதை நூல் நேற்று கொழும்பு வை.எம்.எம்.ஏ யில் வெகு விமர்சையாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான இலக்கியவாதிகள்  எழுத்தாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.


இந் நிகழ்வு தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ்.அப்துல் வாசீத் கலந்து கொண்டார்.

நூலின் முதற்பிரதியை மீராலெப்பை முசம்மில் புரவலர் ஹாசீம் உமர் முன்ணிலையில் பெற்றுக்கொண்டார்.

பேராதனை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் துறைமனோகரன், பொன்மனச்செம்மல் எம். எஸ். தாஜ்மஹான் நாச்சியாதீவு பர்வின், முஸ்டின், எஸ்.ஜனூஸ், கின்னியா அமீர் அலி, மணிப்புலவர் மருதூர். ஏ மஜீத், கலைவாதி கலீல், எஸ்.எழில்வேந்தன் ஆகியோர்களும் உரைநிகழ்த்தினார்கள்.







Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar