BREAKING NEWS

கொரிய மொழிப்பரீட்சை விண்ணப்பப்படிவங்கள் விநியோகம்

ஒக்டோபர் 11, 12 ஆம் திகதிகளில் பரீட்சை

12 ஆவது கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை அக்டோபர் 11, 12 ஆம் திகதிகளில் நடைபெறும்.
இம்முறை பரீட்சையில் கடற்றொழில், நிர்மாணப் பிரிவுகளிலான தொழிலுக்காக ஆட்கள் தெரிவு செய்யப்படும்.

இப்பரீட்சைக்காக விண்ணப்பம் படிவங்களை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று நாட்டிலுள்ள 14 நிலையங்களில் ஆரம்பமானது.
விண்ணப்பப் படிவங்கள் அசெளகரியமின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ரத்மலானை, அதுருகிரிய நிலையங்களுக்கு மேலதிகமாக 12 நிலையங்களில் ஆகஸ்ட் 11 முதல் 14 ஆம் திகதி வரை காலை 09 மணி முதல் மாலை 04 மணிவரை விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்.
இடைத்தரகர்களிடம் அகப்பட வேண்டாமென வெளிநாட்டு வேலை வாய்ப்பும் பணியகம் அறிவித்துள்ளது.
பாஸ்போட், பாஸ்போஸ்ட் பிரதி, பாஸ் போஸ்ட் அளவிலான இரு புகைப்படங் களை விண்ணப்பதாரிகள் எடுத்து வரவேண்டுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar