செரண்டிப் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் 70 உறுப்பிணர்களின் ஆலோசனைப்படி பின்வரும் ஊடக அறிக்கையை தலைவர் முஹம்மத் வெளியீட்டுள்ளார்.
ஜமியதுல் உலமா, சிரேஸ்ட அமைச்சர் பௌசி ஆகியோர் தெரிவித்த செரண்டிப் ஹஜ் குழு பற்றி வெளிவந்த செய்திகள் பற்றி ஊடக அறிக்கைகளுக்கு பதிலாக இவ் அறிக்கையை நான் வெளியிடுகின்றேன்.
இந்த நாட்டின் முஸ்லீம்கள் மத்தியில்
கடந்த 5 வருடங்களாக ஹஜ் விவகாரம் சம்பந்தமாக பெரும் சர்ச்சையொன்று நடைபெற்றுவருவதோடு இதனை மக்கள் யாவரும் அறிந்த விடயமாகும்.
இந்த நாட்டில் 20 இலட்சம் முஸ்லீம்களுக்கு தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் ஜம்மியதுல் உலமா ஏன் இந்த விடயத்தில் மௌனம் சாதித்தது? இந்த உலமாவின் உதவிச் செயலாளாரும் பௌசியின் தலைமையில் உள்ள ஹஜ் குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றார். அவரும் நேர்முகபபரீட்சை குழுவில் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
இதனடிப்படையில் நீதியாகவும், நேர்மையாகவும் ஹஜ் கோட்டாக்கள் பிரிக்கப்படுமென எல்லோரும் எதிர்பார்த்தோம். ஆனால் சிரேஸ்ட அமைச்சர் பௌசி அவர்கள் அவற்றை எல்லாம் கசக்கி எறிந்துவிட்டு கடந்த 5 வருடங்களாக தான் விருப்பப்டி தனக்குத் தேவையாணவர்கள் மட்டும் அதிக கோட்டாக்களை வழங்கி வருகின்றார்.
பாதிக்கப்பட்ட ஹஜ் முகவர்களாகிய நாங்கள் நீதி நியாயம் தேடி வருடா வருடம் நீதிமன்றம் சென்று வருகின்றோம். அதன் படி இம்முறை நீதியும் கிடைத்தது. நாங்கள் சந்தோஷம் அடைந்தோம்.
ஆனால் இதனைப் பொறுக்க முடியாத அமைச்சர் பௌசியும் அவரால் நிறைய கோட்டாக்களைப் பெற்றுக்கொண்டவர்களும் எங்களுக்குகெதிராக செயற்பட்டு வருகின்றனர்.
அத்துடன் இந்த நாட்டின் ஜனாதிபதி, அமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கை சட்டத்துறைக்கும் பொய்யான தகவல்களை வழங்கி சூழ்ச்சிசெய்து தங்களது விடயங்களை சாதித்துக் கொண்டார்கள்.
இதன் விளைவு நீதி தோற்றுப் போனது. அராஜகம் தலைதூக்கியது. நீதியின் மீதும், தலைமைத்துவங்களின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது. பாதிக்கப்பட்டோர் இன்னும் பின்வாங்கப்பட்டோம்.
ஜம்மியதுல் உலமா ஏன் இந்த விடயத்தில் மௌனம் சாததித்தது. இந்த வருடத்தோடு அரசியலில் இருந்தும் மக்களாலும் ஓரம் காட்டப்பட உள்ள சிரேஸ்ட அமைச்சர் பௌசிக்கு இவ்வளவு தைரியம் இருக்குமென்றால் ஏன் இந்த நாட்டின் பாராமன்றம் அங்கீகாரம் பெற்ற ஜம்மியத்துல் உலமா நீதிக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை.
நீதிமன்ற தீர்ப்பை அமுல் நடத்துமாறும் அதற்கு தடையாக இருக்க வேண்டாமென்றும் ஏன் பௌசி அமைச்சர் அவர்களுக்கு ஆலோசனை கூறாமலிருந்ததையிட்டு நாங்கள் மிகவும் மன வேதனையடைகின்றோம்.
இவ்வளவு உண்மைகள் நடந்தும் இவற்றையெல்லாம் மூடி மறைக்கப்படுத்துவதற்காக எங்கள் மீது பொதுபலசேனா விடயத்தை பெரிதுபடுத்தி எங்களுக்கு எதிராக வீனான பொய்ப்பிராசாரத்தை சமுக ஊடகங்களிலும் இதர ஊடகங்களிலும் பூதரமாக வெளிப்படுத்தி அநியாத்தை அரங்கேற்றியவர்களான பௌசியும் அவருடைய அடிவருடிகளுமே.
கடந்த வாரம் வெளிவந்த பத்திரிகை அறிக்கையில் அமைச்சர் பௌசி கூறியிருந்த கருத்தானது ‘ காபீர்களிடம் போய் உதவி கோருபவர்கள் காபீர்களாவார்கள்’ எனும் கூற்றிலிருந்து நீதிமன்றத்தின் நியாயமான தீர்ப்பையும் ஓரு காபீரிடம் சென்று நிர்ப்பந்தப்படுத்தி அநீதியை அமுல்படுத்தியானது தன்னைத்தானே காபிரென சான்று பகர்வதாக உள்ளது.
கடந்த வாரம் வெளிவந்த நவமணிப் பத்திரிகையில் எமது செரண்டிப் சங்கத்தின் 10 முகவர்களையும் பகிஷகரிக்கும்படியும், உலமாக்களும் புத்திஜீவிகளும் அறிக்கை விடுவதாக வேண்டிக் கொண்டார்கள்.
அத்தகையவர்கள் யார்? அவர்களுடைய பிண்னணி என்பதை தெளிவுபடுத்துங்கள். உலமாக்கள், புத்திஜீவிகள் எனச் சொல்லியதும் தாங்கள் தானா? அவர்கள் அப்படிச் சொன்னதற்கான எந்தச் சான்றும் கிடையாது.
நவமணி ஆசிரியருக்கு குறித்த நிகழ்வு தொடர்பாக உள்ளங்கையில் நெல்லிக் கனிபோல் தெளிவு பெற்றிருந்தும் அமைச்சர் பௌசியின் அநீதிகளை கோடிட்டுக் காட்டாமல் அவரின் கூற்றுக்கே நியாயப்படுத்தியது சமுக ஏமாற்றமே.
தேசிய சூறா கவுன்சிலிடம் நாம் எப்படி நீதி கேட்பது ? அந்தச் சூறா சபையின் பிரபல சட்டத்தரணியே பௌசியின் பக்கம் வாதாடினார். அல்லாஹ்வின் உதவியால் நாங்கள் வெற்றிபெற்றோம். அநீதிக்காக போராடிய அந்த சட்டத்தரணியிடம் போய் நாங்கள் நியாயம் கேட்கலாமா?
எமது அயல் நாடான இந்தியாவிலும் இப்படியானதொரு அநீதி கடந்த காலங்களில் ஏற்;பட்டது. அப்போது உடன் செயல்பட்ட அமைச்சர் எஸ்.எம் கிருஸ்னா அவர்கள் உடன் சவுதியின் ஹஜ் அமைச்சரைச் சந்தித்து மேலதிகமாக 10ஆயிரம் ஹஜ் கோட்டாக்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.
ஒரு இந்து அமைச்சரால் முடிந்ததை இலங்கையில் உள்ள முஸ்லீம் அமைச்சரால் இலங்கையில் ஹஜ் கோட்டாவை தீர்க்க முடியவில்லை.
தமது ஆதரவலாருக்கு கூடுதல் கொடுத்த ஹஜ் கோட்டா பட்டியலை அங்குள்ள அதிகாரிகளைப் பிடித்து கனணியில் உள்வாங்கவே இரு முறை ஜித்தாவுக்குச் சென்றார்.
ஆனால் இலங்கை மக்களின் நலனுக்கு ஒன்று செய்ததும் கிடையாது. இவர்கள் சமுக விரோதிகளா? நடுநிலைமையில் சிந்திக்க கூடிய மக்களே சற்று சிந்தியுங்கள். இந்த விடயத்தில் குற்றம் விளைவித்தவர்கள் நாங்களா?v
Post a Comment