BREAKING NEWS

''முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றுத் தவறு'' - ஹசன் அலி


18ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தமை ஓர் பாரிய வரலாற்றுத் தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

18ம் திருத்தச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகம் செய்த போது அதற்கு ஆதரவளித்தமை கட்சி இழைத்த பாரிய தவறாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.

18ம் திருத்தச் சட்டம்தொடர்பில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் போதியளவு தெளிவு இருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் சில உறுப்பினர்கள் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு பலவந்தப்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி சில உறுப்பினர்கள் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளித்தனர்என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில முக்கியமான தீர்மானங்களின் போது கட்சியின் சகல உறுப்பினர்களுடனும் கலந்தாலோசிக்கப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் அனைத்து முஸ்லிம் கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களின் போது கட்சி மிகவும் நிதானமாக தீர்மானங்களை எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். Gtn

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar