காசாவில் நான்கு வார தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல்-பலஸ்தீன பிரதிநிதிகளுக்கு இடையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நேற்று புதன் கிழமை மறைமுகப் போச்சுவார்த்தைகள் ஆரம்ப மாயின. காசாவில் 1,875 பலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையிலேயே நேற்று சமரச பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின. இதில் இரு தரப்புக்கும் இடையில் எகிப்து மத்தி யஸ்தர்கள் தனித்தனி சந்திப்புகளை ஏற்படுத்தி இருதரப்பினரின் கோரிக்கைகளையும் முன் வைத்து தீர்வொன்றை எட்ட முயற்சிக்கவுள்ளனர்.
இந்நிலையில் காசாவில் கடந்த செவ்வாய்க் கிழமை ஆரம்பமான 72 மணி நேர யுத்த நிறுத் தத்தின் இரண்டாவது நாள் நேற்று கடைப்பிடிக் கப்பட்டது. கடந்த ஜ{லை 8 ஆம் திகதி மோதல் ஆரம்பமானது தொடக்கம் நீண்ட நேர அமைதி நிலவும் காலமாக இது அமைந்துள்ளது. இந்த யுத்த நிறுத்த காலத்தை பயன்படுத்தி இரு தரப்பும் பரந்த பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டு தீர்வை எட்டும்படி அமெரிக்க இராஜhங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.
யுத்த நிறுத்த காலம் மேலும் 72 மணி நேரத்திற்கு நீடிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக பலஸ்தீன வெளியுறவு அமைச்சர் ரியாத் மல்கி தெரிவித்துள்ளார். இதில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க சிறு பிரதிநிதிகள் குழுவை அனுப்பிய தாக இரு தரப்பும் குறிப்பிட்டுள்ளன. இந்த பிரதிநிதிகள் தமது நிபந்தனைகள், கோரிக்கை களை முன்வைத்து இராஜதந்திர ரீதியில் போராடவுள்ளனர்.
காசா மீது கடந்த எட்டு ஆண்டுகளாக நீடிக் கும் இஸ்ரேல் மற்றும் எகிப்தின் முற்றுகை அகற் றப்பட வேண்டும் என்பதே பலஸ்தீன தரப்பின் பிரதான கோரிக்கையாகும். ஆனால் காசாவில் பலஸ்தீன போராளிகள் ஆயுதங்களை களைய வேண்டும் என்பது இஸ்ரேலின் பிரதான கோரிக் கையாக உள்ளது. கெய்ரோ பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவும் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.
இதனிடையே பலஸ்தீன் தரப்பில் விதிக்கப்பட்டி ருக்கும் கோரிக்கைகளில் நான்கை இஸ்ரேல் ஏற்றிருப்பதாகவும் மூன்று கோரிக்கைகளை நிராகரித்திருப்பதாகவும் இராஜதந்திர வட்டாரங் கள் மூலம் தெரியவருகிறது. இதில் காசா விமான நிலையத்தை மீளத்திறப்பது, காசாவில் துறைமுகம் ஒன்றை அமைப்பது மற்றும் மேற்குக் கரைக்கும் காசாவுக்கும் இடையில் தொடர்பை ஏற்படுத்துவது ஆகிய பலஸ்தீன தரப்பு கோரிக் கைகளை இஸ்ரேல் நிராகரித்திருப்பதாக தெரிய வருகிறது.
ஆனால் காசா மீதான தாக்குதலை முடிவுக்கு கொண்டுவருவது, முற்றுகையை அகற்றுவது, மீன்பிடிக்கும் உரிமையை 12 கடல்மைல் தொலைவுவரை அதிகரிப்பது மற்றும் பலஸ்தீன கைதிகளை விடுவிப்பது ஆகிய கோரிக்கை களுக்கு இஸ்ரேல் பச்சைக்கொடி காட்டியிருப்ப தாக செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறத்தில் பலஸ்தீன போராளிகள் ஆயுதத்தை களையும் இஸ்ரேல் கோரிக்கையை ஹமாஸ் நிராகரிப்பதாக ஹமாஸின் தலைவர் களில் ஒருவரான இஸ்ஸத் அல் ர'pத் குறிப்பிட் டுள்ளார். "இவ்வாறான ஒரு இலக்கை கோரு வதைக் கூட பிரதிநிதிகள் என்ற வகையில் ஏற்கப் போவதில்லை" என்றார். எகிப்தில் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில் பலஸ்தீனர்கள் தரப்பில் பலஸ்தீன நிர்வாகம், ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜpஹாத் ஆகிய அமைப்புகள் பங்கேற்றுள்ளன.
காசாவில் யுத்த நிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தொடக்கம் காசா மக்கள் சுதந்திரமாக வீதிகளில் நடமாட ஆரம்பித்தனர். சிறுவர்கள் வீதிகள் மற்றும் கடலோரங்களில் விளையாடுவதும், முதல்முறை ஒரு சில கடைகள் மீண்டும் திறந்திருப்பதும் காணக்கூடியதாக இருந்ததென்று அங்கிருக்கும் செய்தியாளர்கள் விபரித்துள்ளனர். அதேபோன்று தாக்குதல் காரணமாக இடம் பெயர்ந்த பலரும் தமது வீடுகளுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இதில் தாக்குதல் காரணமாக முற்றாக தரைமட்டமாகியிருக்கும் தமது வீடு களை சிலர் முதல் முறை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
"எனது மனைவி, குழந்தைகளுக்கு நான் எதனை சொல்வது? இதனை அவர்கள் பார்க்க நான் விரும்பவில்லை. இதனைக் கண்டால் அவர் களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்" என்று பைத் ஹனுவில் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும் தனது வீட்டை முதல் முறை பார்த்த மூன்று குழந்தை களின் தந்தையான ஹஸன் அல் மஸ்ரி குறிப்பிட் டுள்ளார். இஸ்ரேல் தாக்குதல் ஆரம்பமானதைத் தொடர்ந்து கடந்த ஜ{லை 17 ஆம் திகதி மஸ்ரி தனது வீட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறி யுள்ளார்.
மறுபுறத்தில் துப்பாக்கி குண்டுகளால் சேத மாக்கப்பட்டிருக்கும் காசாவின் பெண்கள் பாடசாலை ஒன்றில் இஸ்ரேல் கொடி பறக்கவிடப் பட்டு ஹமாஸ் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட் டிருந்தன.
Post a Comment