BREAKING NEWS

நூதனசாலை முன் காதலிக்கு கத்திக் குத்து


காதல் விரிசலடைந்ததைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த தனது காதலியை காதலன் கத்தியால் குத்திய கோரச் சம்பவமொன்று நேற்று கொழும்பு கறுவாத் தோட்டத்தில் இடம்பெற்றது.

நூதனசாலைக்கு முன்பாக நேற்றுக்காலை 7.40 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தனியார் தொலைபேசி நிறுவனமொன்றில் பணிபுரிந்து வரும் சுமார் 22 வயதான யுவதியினை அவரது காதலன் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
குறித்த யுவதி உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட அதேநேரம் காதலன் கறுவாத்தோட்டச் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள இளைஞன் 23 வயதானவர். இவர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வருகிறார். தனது காதலி இன்னுமொருவருடன் காதலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக எழுந்த சந்தேகத்தின் விளைவாகவே இந்தச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar