BREAKING NEWS

கருமலையூற்று பள்ளிவாசலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவும்- . எச். எம். அஸ்வர்


திருமலை வெள்ளைமணல் கருமலை யூற்று பள்ளிவாசலை மீள அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகத்துறை மேற்பார்வை எம்.பி. யுமான ஏ. எச். எம். அஸ்வர் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் கேட்டுள்ளது டன் இப்பள்ளிவாசலுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதி யின் கவனத்திற்கு கொண்டு வந்துள் ளார்.

அத்துடன் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம திருகோணமலை படைத்தளபதி லால் பெரேரா ஆகியோரோடு தொடர்பு கொண்டு கருமலையூற்று பள்ளிவாசல் சுமார் 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது என்றும் அதன் அருமை, பெருமைகளையும் அவர்களுக்கு விளக்கினார். இப்பிரதேசம் அதியுயர் பாது காப்பு வலயத்துக்குட் படுத்தப் பட்ட பின்னர் ஊர் மக்கள் சென்று தொழுவதில் ஏற்பட்ட தடங்கல்களை கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் அப்துல் மஜீதுடன் சென்று பார்வையிட்டு தடங்கல்களை நீக்கித் தருமாறு இராணுவத்திடம் விடுத்த வேண்டுகோளையும் அஸ்வர் எம்.பி. பாதுகாப்பு செயலாளருக்கு நினை வூட்டினார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் நேற்று (18) அவ்விடத்தை பார்வையிட்டு ஜனாதிபதிக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் மேலும் முதலமைச்சரை கேட்டுள்ளார்.
பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஜனாதிபதியிட மும், பாதுகாப்பு செயலாளரிட மும் அஸ்வர் எம்.பி. முறை யிட்டு சம்பந்தப்பட்ட அனைவ ருக்கும் தனது கண்டனத்தி னையும் தெரிவித்துள்ளார்.
உலக முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு முழு ஆதரவையும் தெரிவிக்கும் இக்கால கட்டத்தில் பாகிஸ்தான் நாட்டுக்கு நல்லெண்ண விஜயம் ஒன்றை ஜனாதிபதி மேற்கொள்ள உள்ள இத்தருணத்திலும், பலஸ்தீன மக்களுக்கு இலங்கை சார்பாக ஜனாதிபதி வழங்கிய ஒரு மில்லியன் டொலர் ரூபா நன்கொடையையும் கவனத்திற் கொண்டும், மிகவும் நிதானமாக நடக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரை கேட்டுக் கொண்டுள் ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar