ஈராக்கில் போர் உக்கிரம்;
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகள், வான்வெளித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
ஈராக்கில் அந்நாட்டு ராணுவத்துக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையிலான சண்டை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில், மொசூல் நகரை கைப்பற்றியுள்ள பயங்கரவாதிகள் தொடர்ந்து முக்கிய நகரங்களை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈராக் அரசுக்கு உதவும் வகையில், அமெரிக்க படைகள் வான்வெளித் தாக்குதலை துவங்கியுள்ளன. நேற்று மொசூல் நகரில் அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில், பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்கு மற்றும் முக்கிய மறைவிடங்கள் அழிக்கப்பட்டதாக வாஷிங்டன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈராக்கில் பயங்கரவாதிகள் நடத்தும் தாக்குதலுக்கு, பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கண்டனம் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், ஈராக்கில், பயங்கரவாதிகளுக்கு எதிராக, பிரிட்டன் ராணுவ தாக்குதல் நடத்தவும் தயங்காது, என கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை பாக்தாத்:மக்களின் வாழ்வாதாரமாக இருக்கின்ற மோசூல் அணையை ஐ.எஸ். படைகள் வசமிருந்து மீட்பதற்காக அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் குர்தீஷ் படையினர் உச்சகட்ட தாக்குதல் நடத்தினர்.
அணையை சுற்றி முகாமிட்டு இருந்த ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் நேற்று வான் வழி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் நடத்திய குர்திஷ் படையினர் அணையை கைப்பற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment