BREAKING NEWS

எழுத்தாளர் அறிஞர் மர்ஹ_ம் முகம்மது சமீம் அவர்களின் நினைவுப்பரவல் கொழும்பு தமிழ்ச்ங்கத்தில்

(அ~;ரப் ஏ சமத்)

கொழும்பு தமிழ் சங்கத்தில் உப தலைவராக கடமையாற்றியவரும். இலங்கையின் முற்போக்கு எழுத்தாளர் அறிஞர் மர்ஹ_ம் முகம்மது சமீம் அவர்களின் நினைவுப்பரவல் கொழும்பு தமிழ்ச்ங்கத்தில் நடாத்தியது. இந் நிகழ்வு கொழும்பு தமிழ்சங்கத்தின் துணைக் காப்பாளர் எஸ்.எச்.எம் ஜெமீல் தலைமையில் நடைபெற்றது.


அமரர் முகம்மது சமீம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. டாக்டர் தாசீம் அகமத், கலைச்செல்வன், தமிழ்ச்சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பு சிவா, இலக்கியபணிக்குழு செயலாளர் ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி, மற்றும் கலைச்செல்வன் உரையாற்றினார்கள்.

அறிஞர் சமீம் கிழக்கு மாகாணத்தின் கல்விப் பணிப்பாளர், கொழும்பு சாஹிராக் கல்லூரி அதிபர், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் 15 க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருக்கு அரச சாகித்திய மண்டலப்பரிசு 3 வருடத்திற்கு முன் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது. இருந்தும் முஸ்லீம் சமுகம் அவர் உயிருடன் இருக்கும்போது பாராட்டு நிகழ்வினை நடாத்த தவறிவிட்டனர். இருந்தும் கொழும்பு தமிழ் சங்கம் அவரை நினைவு கூறுவதை இட்டு நாம் பெருமைப்படுவதாக டாக்டர் தாசீம் அகமத் தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar