அமைச்சர் நிமால் சிறிபால டி.சில்வாவின் கருத்து எம்மை படுமோசமாக பாதித்துள்ளது; அமைச்சர் ஹக்கீம் விசனம்!
ஊவா தேர்தலில் முஸ்லிம் கூட்டணியில் எமது வேட்பாளர்கள் போட்டியிடுவதாலேயே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்கின்ற அமைச்சர் நிமால் சிறிபால டி.சில்வாவின் கருத்து எம்மை படுமோசமாக பாதித்துள்ளது!
முஸ்லிம் கட்சிகள் ஒரே அணியாக இன்று நிற்பதனால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமது லெவ்வையின் இல்லத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றுகூடலில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு தொடர்ந்துரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம்;
“முஸ்லிம் கட்சிகள் ஒரே அணியில் வருவதென்பது ஒரு அச்ச நிலையை சிலருக்கு ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல தமிழ் கட்சிகளின் கூட்டாக செயற்பட முடியுமாக இருந்தால் ஏன் முஸ்லிம்கள் கூட்டாக செயற்பட முடியாது என பதுளை முஸ்லிம்கள் கேட்கின்றனர்.
அவர்களின் கேள்வி நியாயமானதாகும். முஸ்லிம் கட்சிகள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து வந்தால் மாத்திரம்தான் நாங்கள் ஆதரிப்போம் எனவும் பதுளை முஸ்லிம்கள் கூறினர்.
ஊவா மாகாண சபை தேர்தலில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் கூட்டு தேசிய மட்ட அரசியலில் முஸ்லிம்கள் கையாள்வதற்கு சிறந்த ஒரு மாற்று வழியாக இருக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்புடன் தான் உரசிப்பார்க்க வேண்
டும்.
டும்.
முஸ்லிம்கள் ஒரே அணியில் வருவதென்பது அரசாங்க கட்சிக்கும் அதே போன்று எதிர்க்கட்சிக்கும் அச்சத்தை கொடுத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி முஸ்லிம்களின் வாக்குகளை சுரண்டி, சுரண்டி அதில் பிழைப்பு நடத்தியது. கிராமப்புற சிங்கள மக்களின் வாக்குகளை ஐக்கிய தேசியக் கட்சி பெறுவதற்கு நாட்டமே இல்லை.
முஸ்லிம் பேரம் பேசும் சக்தி என்பது தேசிய அரசியலில் ஆளும் கட்சி எதிர்க்கட்சிகளுக்கிடையில் அரசியல் சம நிலைதன்மையை உருவாக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் திரட்டி முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற சவால்களை எதிர்கொள்வதற்கான அடுத்த வியூகத்தை வகுக்க வேண்டும்.
அன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் பிரேமதாசவுக்குமிடையில் இருந்த உறவு என்பது வித்தியாசமான உறவாக இருந்தது. அன்று நமது மறைந்த தலைவர் அஷ்ரப் எதிர்க்கட்சியில் இருந்தார். பிரேமதாசா நண்பனாக இருந்தார்.
நான் இன்று ஆளும் கட்சியில் இருக்கின்றேன். ஆனால் மகிந்த எதிரியாக பார்க்கின்றார். இதை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நான் இன்று ஆளும் கட்சியில் இருக்கின்றேன். ஆனால் மகிந்த எதிரியாக பார்க்கின்றார். இதை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் ஒரு முஸ்லிம் வேட்பாளரையும் போடாதது தொடர்பாக தவிசாளர் ஒரு கருத்தைக் கூறினார். சிங்கள கடும்போக்குவாதிகள் குற்றம் காண்பதற்கு நல்ல சந்தர்ப்பமாக போய்விட்டது- எனக்கூறினார்.
கடும்போக்குவாதிகள் இருக்கும் இடம் பற்றி பூரண அறிவு அரசாங்கத்திற்கு இருக்கின்றது. அதை அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.
கடும்போக்குவாதிகள் எப்படி செயல்படுகின்றார்கள் என்பது அரசுக்கு நன்கு தெரியும். அதனாலேயே அரசுக்கு விவஸ்தையே இல்லை. ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு விவஸ்த்தை இருக்கின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் முஸ்லிம் வேட்பாளர்களை போடாமல் விட்டதை வைத்து எங்களுடைய கூட்டாளிமாரின் கட்சிக்குள் முஸ்லிம்கள் போட்டியிடுகின்றனர் என அமைச்சரவை நண்பர் நிமால் சிறிபாலடி சில்வா கூறியிருப்பது எங்களை படுமோசமாக பாதித்துள்ளது.
அவர்களுடைய வேட்பாளர்களை எங்களுக்குள் போடுவதற்கு முயற்சித்தார். நாங்கள் வேண்டாமெனக் கூறிவிட்டோம்.
வேட்பாளர்களை தந்து உதவி செய்யத் தேவையில்லை. விலகி நின்றால் அது எங்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்தோம்.
அரசாங்கத்தின் கெடுபிடிகளாக அரசுக்கு கொந்தராத்துச் செய்யும் கூட்டமாக முஸ்லிம்கள் ஒரே அணியில் நிற்பதை விமர்சனம் செய்கின்றனர். முஸ்லிம்கள் ஒரே அணியில் நிற்பதென்பது இவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுபல சேனா மற்றும் ராவணா சக்தி, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்த இஸ்ரேல் – பலஸ்தீன் தொடர்பான ஆர்ப்பாட்டங்களை நிறுத்த வேண்டுமெனக் கூறியுள்ளதாக நான் ஒரு குறுஞ்செய்தி தகவல் ஒன்றில் பார்த்தேன்.
இந்த பொதுபல சேனா,மற்றும் ராவணாசக்தி, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புக்களை மோதவிடுவது என்பது ஒரு தேவைக்காகவே நடைபெறுகின்றது. இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
முஸ்லிம்கள் ஆத்திரப்படுவதில் முந்திக் கொள்கின்றனர். இவை அனைத்துக்கும் பின்னால் ஒரு சக்தியே உள்ளது. அது வெளிநாட்டு சக்தியா அல்லது உள்நாட்டு சக்தியா என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
ஏதிர்க்கட்சி இன்று அதற்கான தகுதியை இழந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இரண்டாவது தடவையாக ஐந்தாவது வருடத்தில் ஜனாதிபதியாக இருந்தபோது எதிர்க்கட்சிகள் பெரிய போராட்டமொன்றை செய்தன. அந்த ஆர்ப்பாட்டம் தான் மகிந்தவுக்கு சாதகமானது.
இன்றுள்ள நிலைமை வேறு. அப்படி மக்களை திரட்டி போராடுவதற்கு எதிhக்கட்சிகளுக்கு வீரியமில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூர நோக்குடன் இவைகளை அவதானிக்கின்றது. ஆட்சியாளர்களுக்கு சாஸ்டாங்கம் செய்கின்ற சேவகம் செய்வதற்கு பார்த்துக் கொண்டிருக்கின்ற கூட்டம் மாதிரி கதைப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அந்தக் கதைகளினால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சரணாகாதி அரசியலுக்கு தயாராகி விட்டது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு நாடகத்தை ஆடுகின்றது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பழி சொல்ல பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடகமாடும் கட்சியல்ல. மக்கள் உணர்வுகளோடு பயணித்துத்தான் அதனுடைய இலக்குகளை அடைந்துள்ளது.
சவால்களை சந்திப்பதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
சவால்களை சந்திப்பதற்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
Post a Comment