BREAKING NEWS

மேயர் முதல் எம் பி வரை பல்புதான் போடுகிறார்கள் கல்முனையில்!

கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதான வீதியில் அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் பணி ஆரம்பம்!


20140815_164617
கல்முனை மாநகரத்தினை அழகுபடுத்தும் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கல்முனைக்குடி, சாய்ந்தமருது பிரதேச பிரதான வீதியில் நவீன அலங்கார மின்விளக்குகள் பொருத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை (15) கல்முனைக்குடியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொண்டு திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், வீதி மின்விளக்குகளைப் பொருத்தும் நடவடிக்கையையும் பார்வையிட்டார்.
இதில் கல்முனை மு.கா. மத்திய குழுத் தலைவர் எம்.ஐ. கரீம் ஹாஜியார் உள்ளிட்ட சிவில் சமூக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இத்திட்டத்திற்கென பாராளுமன்ற உறுப்பினர் கல்முனைக்குடி பிரதேசத்திற்கு 30 இலட்சம் ரூபாவும், சாய்ந்தமருது பிரதேசத்திற்கு 20 இலட்சம் ரூபாவும் ஒதுக்கீடு செய்துள்ளார்.
??????????????????????????????????????????????????????????????

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar