BREAKING NEWS

பள்ளிவாசலுக்கு செல்ல பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு மறுப்பு: அதிருப்தியில் வீரர்கள்

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபடதம்புள்ள பள்ளிவாசலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி கண்டியில் இடம்பெறவுள்ளது.
 
இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கட் அணி வீரர்களும் ஏனைய அதிகாரிகளும் முயற்சித்துள்ளனர்.
 
எனினும், இலங்கைப் பாதுகாப்பு தரப்பினர் தம்புள்ள மஸ்ஜிதுள் கஹய்ரா என்னும் பள்ளிவாசலுக்கு சென்று தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு பாகிஸ்தான் அணி வீரர்கள் தொழுகையில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டமைக்கு அணி வீரர்களும் அதிகாரிகளும் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
 
பாகிஸ்தான் கிரிக்கட் அணியை இலங்கை அதிகாரிகள் அவமரியாதை செய்துள்ளதாக சில பாகிஸ்தான் வீரர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
 
இந்த சம்பவத்தின் பின்னர் பாகிஸ்தான் கிரிக்கட் வீரர்கள் கலேவல பள்ளிவாசலுக்கு சென்று, தமது வெள்ளிக்கிழமை மாலை தொழுகைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar