BREAKING NEWS

பொதுபலசேனாவின் மாநாடு- 500க்கு மேற்பட்ட பிக்குகள் அரசியல்மயம். உலமாக்கள் தனிக்கட்சியாக அரசியலில் ஒன்றுபடமுடியாதா?

(அ~;ரப் ஏ சமத்)

நேற்று  நடைபெற்ற பொதுபலசேனாவின் மகாநாட்டுக்குச் சென்றிருந்தேன்.  இம் மகாநாடு ஓர அரசாங்க அல்லது ஜனாதிபதி நடாத்தும் ஒரு மாபெரும் மாநாடாக காட்சியளித்தது.  கொழும்பு சுகதாச விளையாட்டு அரங்கினை வளைத்து அரச பொலிஸ் போக்கு வரத்துக்கள் மற்றும்
பொலிசார் சுற்றி வலைத்து பாதுகாப்பு வழங்கினார்கள்.  நாட்டின்  சுமார் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அரச தணியார் பஸ்களில் பொதுபலசேன கொடி கட்டி  இலக்கமிடப்பட்டிருந்தது.  இந்த நாட்டில் பல்வேறு அரச தணியார் கம்பணிகளில் உயர் பதவிகள் வகிக்கும் ஊழியர்களும் காணப்பட்டனர்.  சர்வதேச ஊடகங்கள் சுமார் 1000 க்கும் மேற்பட்ட ஆண்.பெண் தொண்டர்கள் வெள்ளை ஆடை அணிந்து அடையாள அட்டை பதக்கம் அணிந்து மாநாட்டு  பாதுகாப்பு மற்று சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
5000 க்கு அதிகமான  ஆமதுருக்கள் சமுகம் தந்திருந்தனர்.  பேர்மா நாட்டின் 969 அமைப்பின் தலைவர் “அஸ்வின் விர தேரர்ருக்கு” அரச விசேட பிரமுகர்  வி.ஜ.பி பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவருக்கு எம்.எஸ்.டி மற்றும் பி.எஸ். டீ பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. பௌத்த  வங்கிகள் மற்றும் தணியார் கம்பணிகளின் தலைவர்களும் அங்கு காணப்பட்டனர். சுகதாச உள்ளக அரங்கு  என்றுமில்லதாவாறு தொலைக்காட்சிகள் இட்டு விசேட மேடை போடப்பட்டிருந்தது.
கொரியாவில் இருந்து பாராளுமன்ற உறுப்பிணர் உலக  பௌத்த இயக்கத்தின் செயலாளர்,  இந்தியாவில் ஜம்பு காஸ்மீர் வென் தேரர், நேபால் பாராளுமன்ற உறுப்பினர்,  ஹிந்து இயக்கத்தின் இலங்கைப் பிரதிநிதி, பொதுபலசேனாவின் தலைவர் - விமலஜோதி தேரர், தேசிய அமைப்பாளர் விகாரத்தேனிய தேரர்,  பிரதான செயற்பாட்டுப்பணிப்பளர் கலாநிதி திலங்க விதானகே பொதுபலசேனாவின் செயலாளர் கலகொடஅத்தோ ஞானதேரர் ஆகியோர் அங்கு ஆக்ரோசமாக சகலரினது உரைகளிலும் முஸ்லீம்களையும் அவர்களது மத கலை கலாச்சார உணவு அரபு நாடுகள் பற்றி தொட்டு ஆக்ரோசமாக உரையாற்றினார்கள்.
பேர்மா அஸ்வின் வீர தேரர் -  இலங்கை சில முஸ்லீம் அந்தவாதிகள் எனது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தாக அறிந்தேன்.   எனக்கு விசா வழங்கியமைக்கு நான் இந்த நாட்டின் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எனது தலைமையின் கீழ் 6 இலட்சம் போராளிகள் பேர்மாவில்  உள்ளனர்.  அதில் 6000க்கும் மேற்பட்ட தேராகள் உள்ளனர்.
இந்த மாநாட்டில்  இருந்து பொதுபலசேனாவின் செயற்பாட்டுக்கு எனது அமைப்பான 969 இணைந்து செயலாற்றும் எனத் பேர்மா அஸ்வின்  தெரிவித்தார்.


ஹிந்து  தலைவரின் உரையின்போது -
அம்பாறை காரைதீவு தமிழ் கிராமத்திலும் முஸ்லீம்கள் பள்ளிவசால் நிர்மாணிக்க முற்படுகின்றனர், ஹிந்து மக்களை  முஸ்லீம் மற்றும் கிரிஸ்;த்ர்வகள் அவர்கள் மதத்திற்கு மாற்றுகின்றனர். தமிழர்களுக்கு ரீ.என்.ஏ தமிழ் கட்சியை விட்டுவிட்டு  சிறந்த தமிழ் தலைமைத்துவம் தற்போதைக்கு  தேவையாக உள்ளது. நாங்கள் பௌத்தர்களுடன் இணைந்து எதிர்காலத்தில் ஒன்றாக செயல்பட உள்ளோம். மண்னார் ராஜப் ஜோசப் ஆயர் அவர்கள் அப்பிரதேசத்தில் உ;ளள ஹிந்து கோவில் இருந்த இடங்களையும் அம் மக்களையும்  கிரிஸ்த்துவ ஆலயமாக ஆக்கியுள்ளார் அதனை அவர் மீட்டு ஹிந்துக்களிடம் ஒப்படைக்க  வேண்டும்.
பொதுபலசேனத் தலைவர் விமலஜோதி தேரர்
இந்த நாடு ஒரு பௌhத்த நாடு. பொளத்தம் மட்டும் தான் இந்த நாட்டில் இருக்க வேண்டும். பாக்கிஸ்தான், சவுதி அரேபியா நாடுகளுக்கு முஸ்லீம்கள் விசா பெற்றுச் சென்று  அங்கு  பயிற்சி எடுத்து இந்த நாட்டில் அனேகம் பேர் உள்ளனர். இந்த நாட்டில் ஆனேகம் இஸ்லாமியர்கள் வீடுகள் வாங்கி இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனா.  அவர்கள் யார் எதற்காக வந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது ? ஈராக்கில் சிரியாவிலும் நடப்பது போன்றுதான் எமது பௌத்த நாட்டுக்கும் ஏதுவும் நடக்கலாம், 5000 பிக்குகளும் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நீங்கள் ஒவ்வொரு முஸ்லீம் வீடுகளும் பள்ளிவாசல்களும் பரீசீலனைக்குட்படுத்த வேண்டும்.  சர்வ மதம் என்று ஒன்று இந்த நாட்டில் இருக்கக் கூடாது இந்த நாட்டில் ஒரே ஒரு மதம் பௌத்த மட்டும்தான் இது ஒரு பௌத்த நாடு உலகில் உள்ள பௌத்த மக்களோடு நாம் ஒப்பிடும் போது நாம் சிறுபாண்மை ஆகவே தான் உலகில் பௌத்த நாடாக இரக்க வேண்டும்.

பொதுச் செயலாளர் ஞானசாரத் தேரர் -
இந்த பேர்மா தேரரின் வருகையை தடுப்பதற்கு  முஸ்லீம் கவுண்சில் ஜனாதிபதிக்கும் பாதுகாப்புச் செயலாளாருக்கும் கடிதம் எழுதுவதாகவும் குடிவரவுத் திணைக்களத்தினை சுற்றி வலைப்பதாகவும் தெரிவித்தனர். நானும் பாத்துக்கொண்டு தான் இருக்கின்றேன்; இன்னும் அவர்களைக் காணவில்லை. அவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. பொளத்தத்தேரர் ஒருவர் எமது பௌத்த நாட்டுக்கு வருவதை தடுக்க முஸ்லீம் கவுண்சில் என்பவர்கள் யார் ?
சவுதி அரேபியா போன்ற நாடுகளில் அரசர்களுக்குத்தான் சூரா கவுண்சில் ஆலோசனை வழங்குவதற்கு இருக்கும்.  இந்த நாட்டில் சூரா கவுண்சில் அமைத்து இயங்குவதற்கு யார் அவர்களுக்கு அனுமதி அளித்தது. அதனை இயக்க விடப்போவதில்லை.
அளுத்கமவின் சம்பவத்திற்குப்பின் மொஹிடின் என்பவர் பௌத்தர் ஒருவரின் உடல் முஸ்லீம் பட்டாலும் குற்றம் என  ஆங்கிலத்தில் 2 புத்தகங்களை அச்சடித்து உலகுக்கெல்லாம் அனுப்பியுள்ளார். இதற்கெல்லாம் நாங்கள் பயப்படப்போவதில்லை. எங்களது ஆமதுருவுக்கு அடித்துவிட்டு இவர்கள் புத்தகம் எழுதி உலகுக்கு அனுப்புகின்றார்களா ?
நாங்கள் அண்மையில்  கொரியாவிற்குச் சென்றோம. எமது இயக்கத்திற்கு நிதி சேகரிப்பதற்காக அங்கு தொழில் செய்கின்ற இலங்கை பௌத்தர்கள் இந்த மாநாட்டை நடத்துவதற்கு 5 நாட்களுக்குள் பாரிய தொகையை சேகரித்து தந்தார்கள். உங்களுக்காக நாங்கள் இங்கு இருக்கின்றோம். உங்களது நடவடிக்கைகளை ஆரம்பியுங்கள் என பணத்தை அள்ளித் தந்தார்க்ள்.
ஆனால் இந்த நாட்டில் உள்ள பௌத்த பணக்காரர்கள்  சிலர் உதவுமாறு கேட்டால் ஓடி ஒழிகின்றார்கள்.
பொது ஆபேட்சகராக மாதுர தேரருக்கு பிண்ணால்  200 கோடி ருபாவை அள்ளி வீசி அவருக்கு பணம் பாய்ச்சுவதற்காக அமேரிக்கா உள்ளது. அவர் நல்ல ஒரு பௌத்தராக இருந்தால் அதில் இருந்து அவர் விலகிக்கொள்ள வேண்டும். அத்துடன் அவர் பின்னால் உள்ள என்.ஜி.ஓவை இந்த நாட்டுக்கு உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
இந்த நாட்டில் இன்னுமும் ஹலால் பிரச்சினையும் உள்ளது. எங்களை அவர்கள் ஏமாற்றிவிட்டு ஹாலால் தொடர்ந்து இந்த நாட்டில் இருக்கின்றது.. வஹாபி, தௌகீத், அல்.சாபி, முஸ்லீம் கவுண்சில், சூராக் கவுன்சில், ஜம்மியத்துல் உலமா மற்றும் முஸ்லீம் கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து பின்வரும் உங்களது குர்ஆண் வசனங்களில் உள்ள விடயத்தையும் எங்களு;க்கு தெளிவுபடுத்த வேண்டும். உங்களுடன் நான் விவாத்திற்கு தயார் ? நான் ஒருபோதும் நீதிமன்றத்திற்கு வழக்குகளுக்குகள் போட்டாலும் பயமில்லை அத்தணைக்கும் நான் தயார்.
சகி அல் புகாரி, 4 (196)
முஹம்மத் - அல்லாஹ் சொல்லி -லாஹிலாக சொல்லி சகலரையும் இஸ்லம் மதத்திற்கு எடுக்க வேண்டும்.
குர்.ஆண் 2.193
குர்ஆண். 9.05
குர்ஆண் 2.216 இஸ்லாத்திற்கு வராவிட்டால் ஜிகாத் செய்யுங்கள் அவர்களின் சொத்துக்களை உடைமையாக்குங்கள்
குர்.ஆண் 05.33
இந்த வசனங்களை சிங்கள மொழிமுலம் வாசித்துக் காட்டினார். இந்த குர் ஆண் சொன்னபடி இந்த பௌத்த நாட்டினை மாற்றுவதற்கு முடியாத காரியம்.
இலங்கை மத்திய வங்கியின் தலைவர் அஜித் கப்ராலுக்கு  யார் அனுமதி வழங்கியது? சம்பத் வங்கி ஒரு பௌத்த வங்கி, அதுதவிர ஏனைய தணியார் மற்றும்  7 வங்கிகள் சரியா இஸ்லாமிய வங்கியாக மாற்றப்பட்டுள்ளது. இதனை உடனடியாக தடுத்து நிறுத்தல்  வேண்டும்.
5000 தேரர்கள் இங்கு வந்திருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் கிராமத்து  1000 பண்சலையிலிருந்து அவர்களுக்கு உபதேசம் செய்து  1000 பௌத்தரை இணைத்தல வேணடும். ஓவ்வொருவரும் 10000 தர 50000 -  50 இலட்சம் பேர் எமது இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள்  மிகுதி 15 இலட்சம் வடக்கு கிழக்கு ஹிந்து மக்களையும் சேர்த்துகொண்டு சென்றால்  65 இலட்சம் சக்தி எமது கையில் வரும். ஆதில் இருந்து நாம் தான் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மாணிக்கும் சக்தி.   நல்ல ஒரு பௌத்தன், சிரம் நீட்டிய  ஜனாதிபதியை நாங்கள் நிறுத்துவோம்.
முஸ்லீம் தீவிரவாதிகளுக்கு பயந்து, தலை சொரிகின்றவர் இந்த  நாட்டின் தலைவர் எமக்குத் தேவையில்லை. நமக்கு இணி ஆட்சிக்கதிரையை ஆக்கவும்  முடியும். அழிக்கவும் முடியும். இந்த பௌத்த நாட்டின் தலைவனை யாரிடம் ஒப்படைப்பது என்பதை மிக விரைவில் நாங்கள் தீர்மாணிப்போம்.
மஹிந்தவோ, ரணிலோ, அனுரகுமார திசாநாயக்கவோ எமது கட்சி நிறம் என்று பார்க்காமல் பௌத்தர்களினதும் எதிர்கால பரம்பரையின் அநாக்கத்தையே பௌத்தன் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும்  சிந்திங்க வேண்டும். இனி நீங்கள் உங்களது பிரதேசம் பற்றி உண்னிப்பாக இருங்கள். தலைநிமிர்ந்து பௌத்தனுக்கும் இந்த நாட்டுக்கும் அநீதி இழைத்தால் உடன் தட்டி கேளுங்கள் அதற்காக உயிர்த்தியாகம் செய்வதற்கும் தயாராக இருங்கள்.

ஜ.தே.கட்சியின் பொருளாராக பாராளுமன்ற உறுப்பிணர் ஈராண் விக்கிரமசிங்க அண்மையில் கட்சி மாநட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் யார் “அசம்பிளிகோட் “எனும் 600 கிரிஸ்த்தவ பள்ளிகள்  கொண்ட என்.ஜி.ஓக்காரன் இவரை  ரணில் பொருளாளராக  நியமித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு அனுப்பும் உங்கள் பிரதிநிதி ஆகக் குறைந்தது பல்கலைக்கழக பட்டமாவது  பெற்ற நல்ல ஒரு பௌத்தனையே  அனுப்புவோம். போதைப்பொருளுக்கும் சூதுக்கும் துணைபோகின்றவர்கள்,  அமைச்சரின் அடியாளுக்கும  நாம் ஒருபோதும்; நாட்டை தாரைவாக்காமல் தலை நிமிர்ந்து பௌத்தத்திற்காக தண்னையே அர்ப்பணிக்கும் ஒருவரை தெரிவோம். டை கோட் அணிந்த அரச தலைவரை விட்டுவிட்டு நமது   ஏழைகளின் குரக்கண் சால்வை அணிந்த தலைவர் உள்ளார். அவர் கடந்த யுத்தத்தில் தலைநிமிர்ந்து யாருக்கும் அடிபணியாமல்  எடுத்த யுத்த வெற்றி போண்று  இன்னும் அவர் செயல்படவேண்டும். வெளிநாட்டு என்.ஜி.ஓக்கல் அல்லது முஸ்லீம் நாட்டின் பெற்றோலுக்காக நாம் ஒருபோதும் பயப்படககூடாது. எமக்க பெற்றோல் சவுதி அரேபியாவில் இருந்து வரவில்லை.  சிங்கப்ப+ரில் இருந்தே பெற்றோல் வருகின்றது. நாம் முஸ்லீம் நாடுகளுக்கு ஒருபோதும் பயப்படத் தேவையில்லை.
இந்த நாட்டில் 3000 பௌத்த பெண்களை மதம் மாற்றியுள்ளனர். எங்களது பெண்கள் முஸ்லீமை திருமணம் முடித்தால் அவர்கள் முஸ்லீம் மதத்திற்கு கட்டாயம் மாறவேண்டுமாம்.  தெனியாய என்ற ஒரு தமிழ் கிராமத்தையே முஸ்லீம் கிராமாக மாதமாற்றியுள்ளனர்.
இன்றில் இருந்து இங்கு வந்துள்ள 5000 ஆமதுருக்களும் இந்த பொதுபலசேனாவின் அங்கத்தவர்களாக இயங்கி நாளையி;ல் இருந்து முஸ்லீம் தீவிரவாதியை தோற்கடித்து சிறந்த பௌத்த மக்களையும் பாதுகாத்து எதிர்கால பரம்பரைக்கு  இந்த நாட்டை பாதுகாக்க எழுந்தெழுவீர்களா ?  அத இந்த சமா “அப சரணய்”

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar