BREAKING NEWS

பண்டாரநாயக்காவின் 55ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

முன்னாள் பிரதமர் அமரர் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்டார நாயக்காவின் 55 ஆவது சிரார்த்த தினம் இன்று (26) ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த நினைவு தினம் தொடர்பாக விசேட நிகழ்ச்சி நிட்டம்புவ ஹொர கொல்லையிலுள்ள அமரர் பண்டாரநாயக்கா சமாதிக்கு அருகில் இன்று காலை நடைபெறும்.
உலகின் முதலாவது பெண் பிரதமரான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவின் நினைவையும் அநுஷ்டிக்க ஏற்பாடாகி உள்ளதாக நினைவு தினக் குழு தெரிவித்துள்ளது.
அரசியற் பிரமுகர்கள், பண்டாரநாயக்கா குடும்ப உறுப்பினர்கள் உட்பட அநேகர் பங்கு கொள்வர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar