படகுமூலம் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் அகதிகளை கம்போடியாவிற்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கம்போடிய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டதை அவுஸ்திரேலியா உறுதி செய்துள்ளது.
படகுகள் மூலம் விசா இல்லாமல் வந்தவர்களையும் நெளரு, மனுஸ், பப்புவா நியூகினியா தீவுகளில் உள்ளவர்களையும் கம்போடியாவுக்கு அனுப்புவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை மிக விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
ஆனால் கிலார்ட் பதவியில் இருந்த போது புகலிடம் கோரியவர்களை மலேசியா அனுப்பியது போன்ற நடைமுறைதான் இதுவும் என மொரிசன் விளக்கியுள்ளார்.
இதேவேளை, இந்த நடவடிக்கையானது மனித உரிமை மீறலாகும் என மனித உரிமை அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. கம்போடியாவில் அகதிகள் வாழ்வதற்கான சரியான சூழலும் இல்லை என மனித உரிமை அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Post a Comment