ஊவா மாகாணசபைத் தேர்தலை ஒத்திவைக்கும் உரிமை அரசாங்கத்துக்குக் கிடையாது என ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தேர்தல் தோல்விக்கு இன்றிலிருந்தே தயாராகுமாறும் அவர் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுத்தார்.
ஊவா மாகாணசபைத் தேர்தலை இரு தினங்களில் நடத்துவதற்கு அரசாங்கம் தயாராவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, அரசாங்கத்தினால் தேர்தலை ஒத்திவைக்க முடியாது. தேர்தல் ஆணையாளருக்குத் தான் இது தொடர்பான அதிகாரம் உள்ளது. அவ்வாறு செய்வதானால் அதனை தேர்தல் ஆணையாளர்தான் செய்ய வேண்டும். வெற்றிகரமாக மக்கள் ஆணையைப் பெற்றுக்கொள்வதற்காகவே ஊவா மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சி தோல்வியை ஏற்க தயாராயின் இன்றிலிருந்தே அதற்கு தயாராகட்டும்.
தேர்தல் ஆணையாளர் சகல கட்சிகளுடனும் தேர்தல் குறித்து பேச்சு நடத்தி வருகிறார். நாம் குழப்பமடையத் தேவையில்லை. அதிக பாதுகாப்புத் தரப்பினரை அங்கு சேவையில் ஈடுபடுத்தத் தேவையில்லை. எதிர்பார்த்திருந்த தோல்வியை மக்கள் எதிர்க்கட்சிக்குப் பெற்றுத் தருவார்கள் என்றார்.
Post a Comment