BREAKING NEWS

களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, விளையாட்டு

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் கல்வி, விளையாட்டு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளை மேம்படுத்தும் நோக்கில் மில்பர் கபூர் மன்றம் செயற்பட்டு வருகின்றது. இந்த வகையில் களுத்துறை மாவட்ட
உதைப்பந்தாட்டத் துறையை மேம்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் மன்றத்தின் ஸ்தாபகரும், தலைவரும், பேருவளை நகர சபைத் தலைவருமான மில்பர் கப+ர் தலைமையில் பெந்தோட்டை பீச் ஹோட்டலில் அண்மையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது உதைப்பந்தாட்டத் துறையில் களுத்துறை மாவட்டத்தில் முன்னணி அணியாக விளங்கும் பேருவளை சுப்பர் சன் அணியின் மேம்பாட்டுக்காக 10இலட்சம் ரூபா அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இந்நிதிக்கான காசோலையை மன்றத் தலைவர் மில்பர் கப+ர் சுப்பர் சன் அணியின் ஆலோசகர் எம்.எஸ்.எம்.றிஸ்வானிடம் கைளித்தார்.
இக்கலந்துரையாடலில் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் அமானுல்லாஹ் தேசிய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் சுபானி மாஸ்டர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar