BREAKING NEWS

பி.எச்.பியசேன எம்.பியின் எட்டு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்திற்கு பார்வையாளர் அரங்கு


சுமார் 20 வருடங்களின் பின் அம் பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப் பினர் பி.எச்.பியசேனவின் சிபாரிசுக்க மைவாக எட்டு இலட்சம் ரூபா நிதி யொதுக்கீட்டின் மூலம் தம்பட்டை பொதுவிளையாட்டு மைதானத்தின் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப் பதற்கான அடிக்கல் நடும் வைபவம் நேற்று
முன்தினம் மாலை(17.09.2014) விளையாட்டு மைதானத்தில் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர் கே. நித்தியானந்தன் தலைமையில் நடை பெற்றது.
இந்நிகழ்வில் உதவும் கரங்கள் அமைப்பின் ஸ்தாபகத்தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகப்பிரிவுகளின் அபிவிருத்திக்குழுத் தலைவருமான சமூகநேயன் பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அடிக் கல்லினை நட்டிவைத்தார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன உரையாற்றுகை யில்,
உணர்வையு+ட்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல் காலத் தில் மட்டும் தான் வீடுகளுக்கும் வீதி களுக்கும் வருகின்றார்கள் அதன் பின்னர் மாயமாக மறைந்து விடுவார் கள். இவர்கள் பல ஆண்டுகளாக ஏமாற்றிக் கொண்டே வருகின்றார்கள் நீங்கள் ஏமாளிகளாகவே இருக்க வேண்டாம் இவர்களுக்கு தகுந்த பாடம்புகுட்ட வேண்டும்.
ஆலையடிவேம்பு பிரதேச சபை இன்று பனங்காடு கண்ணகிகிராமம் அலிக்கம்பை போன்ற கிராம மக்க ளுக்கு குடிநீர் வழங்குவதில்லை. ஆனால் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் இதற்கான டீசல் செலவை தருகின்றோம் வரட்;சியின் காரணமாக மக்கள் கஷ்டப்படுகின்றனர் உடனடி யாக தண்ணீர் வழங்குங்கள் என பல முறை பிரதேச செயலாளரினால் கூறியும் மக்களுக்கு பிரதேச சபையி னால் குடி நீர் பிரதேச சபையினால் வழங்கப்படவில்லை இதையிட்டு நான் வேதனை அடைவதோடு எனது வண்மையான கண்டனத்தையும் தெரிவிக்கின்றேன். அரசின் கீழ் இச் சபை இருக்குமானால் அதிகளவான வேலைகளை உடனுக்குடன் செய்ய லாம். பொருத்தமானவர்களிடம் சபை அதிகாரம் இல்லாவிட்டால் இதுதான் நடக்கும். இதை ஆலையடிவேம்பு பிரதேச சபை மக்கள் அறிந்து இவர்களுக்கு தேர்தல் காலங்களில் தகுந்த பாடம் புகுட்ட வேண்டும். ஜனாதிபதியின் ஏற்பாட்டின் மூலம் வரட்சியினால் பாதிக்கப்பட்ட இம் மக்களுக்கு குடி நீர் போதல்கள் தாங்கிகள் மற்றும் உருளைக்கிழங் குகளை உடனுக்குடன் வழங்கி வரு கின்றோம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்ற திருக்கோவில் நாவிதன்வெளி ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எனது நன்றியினை தெரிவிக்கின்றேன். அண் மையில் காரைதீவு ஆர்.கே.எம். பெண்கள் பாடசாலையில் எனது ஆறு இலட்சம் ரூபா நிதியொதுக் கீட்டின் மூலம் அண்ணை சாராத ஆலயம் திருத்தியமைக்கப்பட்டது இதன் நிகழ்வுகளை பத்திரிகையில் தெரிவிப்பதற்கு ஒரு சிலர் மூடி மறைத்து செய்தியை பிரசுரிக்கின் றனர் இது ஊடக தர்மம் இல்லை.
இளைஞர்களாகிய நீங்கள் எப்போ தும் பொறுமையுடனும் சகிப்புத்தன் மையுடனும் வெற்றி தோல்விகளை தங்கிக் கொள்ளும் தன்மையுடனும் செயற்பட வேண்டும்.இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் உங்களது தம்பட்டை கிராமத்தின் தேவைகளை நிவர்தி செய்து தரு கின்றேன் இங்கு நூலகத்தின் தேவை ப்பாடு உள்ளது. புதிய கட்டடம் ஒன்றை கட்டுவதற்காக நிதி ஒதுக் கீடு செய்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
இவ் வைபவத்தில் கிராம உத்தி யோகத்தர்கள், சமூர்த்தி உத்தியோ கத்தர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar