BREAKING NEWS

ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு இன்று ஆரம்பம் ; ஜனாதிபதி பிரதம அதிதி

33 நாடுகளிலிருந்து 300 பிரதிநிதிகள் பங்கேற்பு
ஆசிய அரசியல் கட்சிகளின் 8 வது சர்வதேச மாநாடு இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
“ஆசிய நாடுகளுக்கிடையேயுள்ள சமூகத்தை கட்டியெழுப்புவோம்” என்ற தொனிப் பொருளில் இன்று ஆரம்பமாகவுள்ள 8 வது சர்வதேச
மாநாட்டிற்காக ஆரம்ப வைபவம் மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாக கலையரங்கில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஆசிய நாடுகளைச் சேர்ந்த 33 நாடுகளிலுமுள்ள சுமார் 75 க்கும் அதிகமான கட்சிகளைச் சேர்ந்த சுமார் 300 பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் இணைத் தலைமையாக இருந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இன்று 19 மற்றும் 20ம் திகதிகளில் பண்டாரநாயக்கா சர்வசே மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் இம்மாநாட்டுடன் இணைந்து இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தலைமையில் இளைஞர் மாநாடும் நடைபெறும்.
இதேபோன்று கம்பஹ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தலைமையில் பெண்கள் மாநாடும் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
ஆசிய நாடுகளின் அரசியல் கட்சிகளின் முதலாவது சர்வதேச மாநாடு 2000 ம் ஆண்டு நடைபெற்றது.
ஆசிய பிராந்தியத்தினுள்ள ஒவ்வொரு நாடுகளும் தாம் பெற்றுக் கொண்ட பொருளாதார, சமூக, கலாசார, அரசியல் ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு இந்த மாநாடு வழிவகுக்கும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடியும், பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமால் பெரேராவும் தெரிவித்தனர்.
இதேபோன்று இலங்கையின் இனநல்லிணக்க செயற்பாடுகள் உள்ளிட்ட அபிவிருத்தி போன்ற சகல விடயங்களும் சர்வதேசத்துக்கு அறிந்து கொள்ள முடியும் என்றும் அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்தார்.
இன்று காலை 9.00 மணி முதல் 10.25 வரை ஆரம்ப வைபவம் (நெலும் பொக்குன) தாமரைத் தடாக அரங்கிலும 11.30 முதல் மாலை 5.30 வரை முதலாவது நாள் நிகழ்வு நடைபெறும்.
முதலாவது நாள் நிகழ்வின் போது ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வசே மாநாட்டின்’ தலைமைப் பொறுப்பு எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.
மேற்படி அமைப்பின் ஸ்தாபகர் சங்-இயூ யங் (Chung - Eui - Youg) தலைமைப் பொறுப்பை ஒப்படைப்பார்.
இரண்டாவது நாள் நிகழ்வு மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகும் மாலை 6.00 மணிக்கு செய்தியாளர் மாநாடு கொழும்பு பிரகடனமு வெளியிடப்படும். 21ம் திகதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ள பிரதிநிதிகள் அனைவரும் காலி நகருக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்த மாநாட்டுக்கு பார்வையாளர்களாக 11 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் வருகை தரவுள்ளனர்.
அத்துடன் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட் டுள்ளதாக தெரிவித்த பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா, வருகை தரும் பிரதிநிதிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க விருந்துபசாரமும் வழங்கவுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar