BREAKING NEWS

கம்பஹா அகதியா ஆசிரியைகளுக்கான கருத்தரங்கு

(அஸ்ரப் ஏ சமத்)

நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் சிறுவர் பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் முஸ்லீம் பெண் பொலிஸ் பாத்திமா ஹாசீம் - இன்;று நீர்கொழும்பு அல்ஹிலால் வித்தியாலயத்தில் நடைபெற்ற கம்பஹா அகதியா
ஆசிரியைகளுக்கான கருத்தரங்கில் உரையாற்றினார்.


முஸ்லீம் பெண்கள் வீடுகளில் நாளாந்தம் தொலைக்காட்சியில் ஒழிபரப்பாகும் நாடகங்களையெல்லாம் ருசித்து பார்த்துக் கொண்டு இருப்பீர்கள். அந்நேரத்தினைப்பார்த்து உங்கள் சிறுவர்கள் திடிரென்று வெளியே போகி வருவான். அவன் எங்கு போகின்றாhன் ? யாருடன் பழகுகின்றான் ?. பாடசாலைக்குப் போகிவிட்டு அவன் பிற்பகல் யாருடன்
விளையாடப் போகின்றான் என்று சற்று விசாரித்து விழிப்பாகவும் இருங்கள்.
நீர்கொழும்பில் நேற்று முன்தினம் ஒரு முஸ்லீம் சிறுவனை 4 ஆண்கள் துஸ்பிரயோகம் செய்துள்ளனர். இந்த பிரச்சினை எமது பொலிசில் முறைப்பாடு வந்தது. நான் இந்த துறையில் இருப்பதனால் முஸ்லீம் சிறுவர்கள், சிறுமிகள் பிரச்சினைகள் நூற்றுக்கணக்கில் இங்கு நான் சொல்லமுடியும். உங்கள் சிறுவன் தெரிந்த ஆண் ஒருவருடன் சென்றாலும்

அவர் பற்றி விழிப்பாக இருங்கள். உங்கள் சிறுவனின் நடவடிக்கைகளை சற்று விசாரியுங்கள், கண்டிப்பாக இருங்கள்.

நீங்கள் வீடுகளில் எந்நேரமும் தொலைக்காட்சி பாத்துக்கொண்டிருப்பீர்கள். ஆனால் அந்த நேரத்தில் உங்கள்

சிறுவன் சற்று வெளியில் போகிவிடுவான். அதனை அவதானியுங்கள் என பெண் பொலிஸ் பாத்திமா ஹாசீம் விரிவுரை நிகழ்த்தினார்.

நீர்கொழும்பு பள்ளிவாசல் மௌலவி உரையாற்றுகையில் -அண்மையில் அக்குரணை பிரதேசத்தில் ஒரு முஸ்லீம் குடும்பம் கணவனும் மனைவியும் கண்டியில் கோடிக்கணக்கில் போதைப்பொருள் விற்பனை செய்தபோது பொலிசாரினால் பிடிக்கப்பட்டார்கள. அவாகள் வாகனமும் மற்றும்
பெயர்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. அன்மையில் கொழும்பில் ஒரு வீட்டில் கோடிக்கணக்கான ருபா பெருமதியான வெளிநாட்டு குடிவகைகள் ஒரு முஸ்லீம் வீட்டில் பிடிபட்டன. வெள்ளம்பிட்டியில் ஒரு முஸ்லீம் தாய் தனது 6வயது மகளை அடித்து கொலை செய்துள்ளார். ஆகவே ; முஸ்லீம்கள் தம்மை ஆண்மிகத்திலும் மற்றும் சிறந்த பிரஜைகளாக வருவதற்கும் நாம்
முன்வருதல் வேண்டும்.

இவ்வாறன ஆண்மிக மற்றும் சிறந்;ததொரு முஸ்லீம் பிரஜைகளாக இளம் பரம்பரையினரை உருவாக்குவதற்கே இங்கு கல்விமாண்களையும் உலமாக்களையும் அழைத்து தங்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கம்பஹா கேகாலை மாவட்டத்தில் இருந்து தெரிபுசெய்யப்பட்ட பெண் ஆசிரியர்கள் நீர்கொழும்பு அல் ஹிலால் பாடசாலையில் தங்கி
நின்று 4 நாற்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. எமது முஸ்லீம் சிறார்களையும் இந்த நாட்டில் நல்ல பிரஜைகளாகவும் ஏனைய சமுத்திற்கு ஒரு முன்மாதிரியாகவும் வருவதற்கும் நீங்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். என கம்பஹா அகதியா சம்மேளனத்தின் தலைவர் வேண்டிக் கொண்டார்.

 டொக்டர் முபாரக் டொக்டர் ஹபரத், அல்ஹிலால் கல்லூரி அதிபர், மற்றும் நீர்கொழும்பு பௌத்த மதகுரு மற்றும் பரீட்சைத் திணைக்களத்தின் ஆணையாளர் முஹம்மட், முஸ்லீம் சமய பண்பாட்டுத்திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நூறுல் அமீன் ஊடகவியலாளர் சித்தீக், அஸ் N~க் மௌலானா நீர்கொழும்பு அல் ஹிலால் அதிபர், ஹஸ்புல்லாஹ்
மௌலவி ஆகியோறும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். பயிற்சிகளை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.

அத்துடன் கம்பஹா அகதிய செயற்பாடுகளுக்கு பாடுபட்டவர்கள் இங்கு கௌரவிக்கப்பட்டனர்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar