BREAKING NEWS

ஊவா வெற்றி; அரசு மீதான தமிழர்களின் நம்பிக்கை வெளிப்பாடு


ஊவா மாகாண சபையில் தமிழ் மக்கள் ஐ.ம.சு. முக்கு அமோக மாக வாக்களித்துள்ளமை சமாதானம், அபிவிருத் திகளில் தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து ள்ளதை வெளிக்காட்டுவதாக சர்வதேச இந்துமத பீடத்தின் செயலாளர் பிரம்மஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கம் தமிழர்களின் வாழ்வின் விடியலையும் நம்பிக்கையையும் கொண்டு வந்தது. இதற்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டே ஊவாவில் தமிழ் மக்கள் ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு. மு கூட்டணியை வெற்றிபெறச் செய்துள்ளனர்.
தடையின்றிய மின்சாரம், நீர்விநியோகம் என்பன தோட்டப்புற மக்களின் வாழ்வில் ஒளியேற்றியது. ஊவாவில் தமிழ் கட்சிகளின் அர்ப்பணிப்பும் இந்த வெற்றிக்கு வழிகோலியுள்ளதையும் பாராட்ட வேண்டியுள்ளது.
மேலும் தொடர்ந்து அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லவும் இந்த வெற்றி உதவும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், நான் உங்களை நம்புகிறேன். நீங்கள் என்னை நம்பலாம் என்று தமிழ் மக்களிடம் அடிக்கடி கூறுவார்.
அவரது நம்பிக்கை வாசகத்துக்கு தமிழ் மக்கள் உறுதுணையாக நின்று ஜனாதிபதியின் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதை தமிழ்மக்கள் தெரிவித்துள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar