BREAKING NEWS

காரைதீவு பள்ளி புனரமைப்பு தடை. சுhய்ந்தமருது பள்ளிநிர்வாகம், உலமா சபை, முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புக்கூற வேண்டும்.

யுத்தத்தினால் சேதமடைந்திருந்த காரைதீவு சந்தி பள்ளிவாயலை மீள கட்டும் முயற்சிகளுக்கு தடைவிதிப்பதன் மூலம்; தமிழ் முஸ்லிம் மோதலை மீண்டும் உருவாக்க முயற்சிப்போரை அகில இலங்கை உலமா கட்சி வன்மையாக கண்டிப்பதாக அதன் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி தெரிவித்துள்ளார்.



அது பற்றி அவர் தெரிவித்ததாவது, 1985ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் முஸ்லிம் கலவரத்தின் போது காரைதீவு சந்தியில் இருந்த சாய்ந்தமருது பரிபாலண சபைக்குட்பட்ட பள்ளிவாயல் பயங்கரவாதிகளால் சேதமாக்கப்பட்டது. அப்பள்ளிவாயல் சேமாக்கப்பட்ட போதும் கல்முனைக்குடியின் எல்லையில் முஸ்லிம் வியாபார ஸ்தலங்கள் கூழவுள்ள தரவைக்கோவிலை முஸ்லிம்கள் உடைக்காமல் பாதுகாத்த வரலாறை நாம் மறுக்க முடியாது.
காரைதீவு பள்ளி வாயல் உட்பட யுத்தத்தால் சேதமடைந்த அனைத்து மதஸ்தலங்களையும்  புனரமைத்துத்தரும்படி தலைவர் அஸ்ரப் அமைச்சராக இருந்த போது ஜனாதிபதி சந்திரிக்காவிடம் கடிதம் மூலம் நேரடியாக நாம் கோரியிருந்தோம். அவ்வாறே அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளை அவர் பணித்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனாலும் கிங் மேக்கராக இருந்த முஸ்லிம் காங்கிரஸ் இது விடயத்தில் பொடு போக்கு காட்டியதால் இவ்வியடம் கிடப்பில் போடப்பட்டது.
இவ்வாறு நாம் சொல்லும் போது இதற்கும் முஸ்லிம் காங்கிரசைத்தான் குற்றம் சொல்வதா என சில அறிவிலிகள் கேட்கலாம். மற்ற முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முடியாமல் போன இத்தகயவற்றை சாதிக்க வேண்டுமென்பதற்காகவே நாம் அன்று  முஸ்லிம் காங்கிரசை பலப்படுத்தினோம். அத்துடன் 1989ம் ஆண்டு முதல் இன்று வரை முஸ்லிம் காங்கிரசே கல்முனை, சாய்ந்தமருதை பிரதிநிதித்துவ படுத்துகிறது என்ற யதார்த்தத்தை புரிந்து கொள்ளாதவர்களே இவ்வாறு  எம்மை பார்த்து கேட்க முடியும். அந்தக்கட்சி இல்லாமல் வேறு கட்சி கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்துமாயின் நிச்சயம் அவர்கள் இவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டியிருப்போம்.
இந்த நிலையில் 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின் சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாக சபையும் சாய்ந்தமருது உலமா சபையும் இணைந்து இந்தப்பள்ளிவாயலை புனரமைக்கப்போவதாக ஊடகங்களில் பறை சாற்றினார்கள். அதனையொட்டி காரைதீவு தமிழ் தரப்புடன் சில கலந்துரையாடலும் செய்யப்பட்டது. யுத்தம் முடிந்து முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திடம் 2010ல் சரணடைந்த போது இதனை மிக இலகுவாக முன்னெடுத்திருக்க முடியும். ஆஈனாலும் இது விடயம் தொடரப்படாமல் சாய்ந்தமருது பரிபாலன சபையும், சாய்ந்தமருது உலமா சபையும் தூக்கத்திலிருந்து விட்டார்கள். ஆகவே இன்றைய இந்த நிலைக்கு சாய்ந்தமருது பள்ளிவாயல் நிர்வாக சபை, உலமா சபை, சாய்ந்தமருதின் 98 வீத மக்களின் வாக்குகளை பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவே  பொறுப்பு கூற வேண்டும்.
ஹக்கீம், ரிசாத், அதாவுள்ளா முட்டுக்கொடுக்கும் இப்போதைய அரசின் 2012ம் ஆண்டுக்கு பிந்திய காலம் என்பது பள்ளிவாயல்கள் உடைக்கப்படும் காலமே தவிர பள்ளிகள் கட்டப்படும் காலம் அல்ல. இதனை புரிந்து ஊவாவில் அரசுக்கு வாக்குகளை பெற்றுக்கொடுக்க ஒற்றுமை நாடகமாடும் ஹக்கீமையும், ரிசாதையும்; அழைத்து மேற்படி பள்ளிவாயல் புனரமைப்பு பணியை ஆரம்பித்திருக்கலாம். இதனை செய்யாமல் சாய்ந்தமருது பள்ளி பரிபாலண சபை யதார்த்தத்தை உணராமல் நடந்து கொண்டமை கவலைக்குரியதாகும்.
ஆனாலும் இது விடயத்தில் இது வரை தூங்கிக்கொண்டிருந்த கல்முனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் இறுதி நேரத்தில் விழித்துக்கொண்டு பிரச்சினை ஏற்படாமல் தவிர்த்தமையை உலமா கட்சி பாராட்டுகிறது.
அதே வேளை மேற்படி பள்ளிவாயல் இருந்த இடத்தில் பொலிஸ் நிலையம் அமைக்கப்போவதாக அடிபடும் செய்திகள் உண்மையானதா என்பதை பொலிஸ் மாஅதிபர் அறியத்தர வேண்டும் என உலமா கட்சி  கோரிக்கை விடுப்பதுடன் தமிழ் முஸ்லிம் இன நல்லுறவுக்கு எடுத்துக்காட்டான மேற்படி பள்ளிவாயலை புனரமைக்க அரசில் உள்ள முஸ்லிம் அமைச்சர்கள் முன்வர வேண்டும். இல்லாத பட்சத்தில் இத்தகைய கையாராகாத அமைச்சர்களின் கட்சிகளை குப்பையில் போடுவதற்கு கல்முனை மக்கள் குறிப்பாக சாய்ந்தமருது மக்கள் முன்வர வேண்டும் என உலமா கட்சித்தலைவர் கூறியுள்ளார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar