BREAKING NEWS

ஊவாவை கொள்ளையடித்தது போதுமாம். ஊவாவை கட்டியெழுப்புவதே அடுத்த பணி - சiந்திர ராஜபக்ஷ


ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் பாதாள உலக நபர்கள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுவதில் எதுவித உண்மையும் கிடையாது என முன்னாள் ஊவா மாகாண முதலமைச்சரும். வேட்பாள ருமான சiந்திர ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களும், பாதாள உலக நபர்களும் தேர்தல்
நடவடிக்கைகளில் ஈடுபட்டி ருப்பதாக ஜே.வி.பி.யினர் குற்றம் சுமத்துகின்றனர். அவ்வாறு ஒரு நிலைமை அங்கு கிடையாது. குற்றம் சுமத்துவதை அவர்கள் யார் யார் என்பதை எமக்கு அறியத்தரலாம்.
இலக்கத் தகடுகள் இல்லாத வாகனங்கள் மற்றும் பாதாள உலக நபர்கள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் பொலிஸ் மா அதிபரை கேட்டுக் கொண்டுள்ளேன் என்றும் சiந்திர ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.
சிறந்த கல்வியினால் மட்டுமே ஒரு மனிதன் தலைநிமிர்ந்து எழுந்து நிற்க முடியும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கூற்றுப்படி கல்வியில் பின்தங்கியிருந்த ஊவா மாகாணத்தில் கல்வி, தகவல் தொழில் நுட்பத்தை பிரதானமாகக் கொண்டு அபிவிருத்தி இலக்கை நோக்கி செயற்பட்டேன். கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், குடிநீர் என அடுத்தடுத்த கட்டங்களுக்குள் பிரவேசிக்க தொடங்கியிருக்கிறோம்.
கடந்த 5 வருடங்கள் நாம் சாதித்தது என்ன? என்பதையும் அடுத்துவரும் காலங்களில் சாதிக்க விருப்பது என்ன? என்பது பற்றி நான் மக்களுக்கு கூறிவருகிறேன். கல்வி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், குடிநீர், நீர்ப்பாசனம் என இவற்றுக்கான அடித்தளங்கள் இடப்பட்டுவிட்டன. இனி இவற்றை கட்டியெழுப்ப வேண்டும் என்பதாலேயே நான் இரண்டாவது தடவையாகவும் தேர்தல் களத்தில் இறங்கினேன் என்றும் கூறினார்.
பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தெரிவுடன் ஊவாவில் கல்வி மேம்பாட்டுக்கான முன்னெடுப்புகளை செய்துள்ளேன். இவற்றின் பிரதிபலிப்புகள் கடந்த 5 ஆம் ஆண்டு, க.பொ.த. சாதாரணதர
உயர்தர பரீட்சை முடிவுகளில் வெளிப்பட்டன. இவற்றை அந்த மக்கள் கண்கூடாக பார்த்தனர்.
தொலைக்காட்சியில் நீங்கள் விவாதங்களில் கலந்து கொள்வதில்லை எனக் கூறுகிறார்களே என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது?
விவாதங்களுக்கு வந்து பிரயோசனமான எதையாவது பேசுகிறார்களா? முழுக்க முழுக்க சேறுபூசும் விமர்சனங்களே அங்கு இடம்பெறுகின்றன. நான் விவாதங்களுக்குச் செல்வதில்லை. எனக்கு சேறுபூசத் தெரியாது. நான் அப்படி வளரவும் இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றி நான் மட்டும் ஊவா மக்களுக்கு இதுவரை என்ன செய்துள்ளேன் என்பதை கூறுவேன். நான் உண்மை கூறுகிறேனா? பொய் கூறுகிறேனா? என்பதை அவர்கள் அறிவார்கள். இனிவரும் காலத்தில் என்ன செய்யப்போகிறேன் என்பதையும் கூறுவேன்.
“நாங்களும் ஒன்றிணைவோம் ஊவா வெல்லஸ்ஸவை கட்டி யெழுப்புவோம்”
என்ற தொனிப்பொருளில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் முன்னாள் முதலமைச்சரும், ஐ.ம.சு.மு. முதன்மை வேட்பாளருமான சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்தார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar