ஹுட்ஹுட் புயல்:
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள “ஹுட் ஹுட்” புயல் மேலும் வீரியமடைந்து வருவதால் அதன் மறைமுகத் தாக்கமாக நாட்டின் பல பகுதிகளிலும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினை எதிர்பார்க்க முடியுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.
இதன்காரணமாக சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சியினை எதிர்பார்க்க முடியுமெனவும் வானிலை திணைக் களத்தின் கடமை நேர அதிகாரியான பி.டி. ஆனந்த பெரேரா தெரிவித்தார்.
‘ஹுட் ஹுட்’ புயல் தற்போது திருகோணமலையின் வடக்கு கிழக் காக 900 கிலோ மீற்றரில் நிலை கொண்டுள்ளது. படிப்படியாக வீரிய மடைந்து வரும் மேற்படி புயல், 12ம் திகதி மாலையளவில் இந்திய ¡வின் வடக்கு ஆந்திராவூடாக கரை யொதுங்குமென எதிர்பார்க்கப் படுகிறது.
எனவே எதிர்வரும் 12 ம் திகதி வரை அதனால் ஏற்படக் கூடிய எதிர்மறையான தாக்கங்களை இலங்கையில் உணர முடியுமெனவும் அவர் கூறினார்.
இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் கடும் மழை மற்றும் பலத்த காற்றினை எதிர்பார்க்கலாமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடலில் கடுங்காற்று மற்றும் கொந்தளிப்புடன் கூடிய நிலை காணப்படுவதால் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Post a Comment