BREAKING NEWS

எல்லை நிர்ணய பணிகள் நிறைவுற்றதும் ஒத்திவைக்கப்பட்ட சபைகளுக்கான தேர்தல்


எல்லை நிர்ணய பணிகள் நிறைவடைந்த உடன் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒத்திவைக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்த இருப்பதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

மாநகர சபைகள், நகர சபைகள், பிரதேச சபைகள், உள்ளூராட்சி அதிகார சபையின் தேர்தல்கள் (திருத்தச்) சட்ட மூலங்கள் மற்றும் உள்ளூராட்சி அதிகார சபைகள் வெற்றிடங்கள் நிரப்புதல் (விசேட ஏற்பாடுகள்) திருத்த சட்ட மூலம் என்பன தொடர்பான விவாதம் நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றிய அரியநேத்திரன் எம்.பி. மட்டக்களப்பில் உள்ளூராட்சி சபைகளும் வடக்கில் புதுக் குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பிரதேச சபைகளும் உரிய காலத்தில் தேர்தல் நடத்தாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்த உள்ளூராட்சி சபைகளை த.தே.கூ. கைப்பற்றுவதாலேயே தேர்தல் நடத்தாமல் ஒத்தி வைக்கப்படுவதாக குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் அதாஉல்லா உள்ளூராட்சி தேர்தல் திருத்தச் சட்டத்துக்கு அமைவாக எல்லை நிர்ணய பணிகள் முன்னெடுக் கப்படுகிறது. அதனாலே தேர்தல்கள் ஒத்துவைக் கப்பட்டன. இதற்கு வேறு பொய் காரணம் கற்பிக்க வேண்டாம்.
எல்லை நிர்ணய பணிகள் பூர்த்தி செய்ய டிசம்பர் வரை காலக்கெடு வழங்கப் பட்டுள்ளது. எல்லை நிர்ணயம் தொடர் பான வர்த்தமானி அறிவித்தல் வெளி யானதும் ஒத்திவைக் கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படும்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar