(எம். ஸப்ராஸ்)
முக்கிய குறிப்பு - கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருக்கே உரியவை)
முக்கிய குறிப்பு - கட்டுரையில் கூறப்பட்டுள்ள கருத்துக்கள் கட்டுரையாளருக்கே உரியவை)
பொது பலசேனாவின் மாநாடு நடந்து முடிந்தது. வழமைப் போன்று சவால்கள் விடப்பட்டன. அதனைக் கண்ட சிலர் கொதித்தனர், வேதனைப்பட்டனர். அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா உட்பட பல முஸ்லிம் இயக்கங்களுக்கு சவால்விட்டு குறிப்பிட்ட சில அல்-குர்ஆன் வசனங்கள் தொடர்பாக விவாதத்துக்கு வருமாறு பொது பலசேனா செயலாளர் சவால் விட்டார். அந்த சேனாக்களைக் கணக்கிலெடுக்காதவர்கள் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை. இவ்வாறான சவால்கள் அவ்வப்போது விடப்படுவது, மேலிடத்து ஆசிர்வாதங்களோடு என்பதையும் அதற்குப் பின்னால் உள்ள சூழ்ச்சிகளையும் சிந்திப்பவர் அறிவர். அதனைப் பொருட்படுத்தாதவர்கள் அலட்டிக் கொள்வதில்லை.
ஆனால் முஸ்லிம்களை எப்போதும் சவால் விட்டு விவாதத்திற்கு அழைப்பு விடும் ளுடுவுதுயினர் தமக்கான சமூக அங்கீகாரத்தை ஈட்டிக் கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு முட்டுக் கொடுப்பதன் மூலம் முயற்சியெடுப்பதாகத் தெளிவாகிறது. இஸ்லாம் தெளிவானது என்று நம்பும் நாம் ஏன் விவாவதத்துக்குப் போக வேன்டும். நாடியோர் இந்தக் குர்ஆனை விசுவாசிக்கட்டும் நாடியோர் அவிசுவாசியாக இருக்கட்டும் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.
அல்-குர்ஆன் விவாதித்து விளங்கும் ஒன்றல்ல. விளங்கும் ஆசைக்கொண்டோர் அதற்கு முறையான வழிகளைக் கடைப்பிடிப்பதின் மூலமே அல்-குர்ஆனை விளங்க வேண்டும். அல்-குர்ஆனுக்கும் இஸ்லாத்துக்கும் வரும் சவால்கள் இன்று நேற்று ஆரம்பிக்கவில்லை. அது ஆரம்பகாலம் முதலிருந்;தே வெளிப்பட்டதல்லவா? இதன் பின்னால் உள்ள சமூகத்தை குழப்பும் சூழ்ச்சிகள் என்ன? இதைக்கூட விளங்காமல் சவாலை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறும் இவர்களின் உள்நோக்கம் என்ன? ளுடுவுது யின் கடிதம் அது தனக்கொரு சமூக அங்கீகாரத்தை அடைய முயல்கிறது என்பதையே விளக்குகின்றது. அதுவன்றி ஏற்கனவே முஸ்லிம்களை அழித்தொலிக்கும் முன்முடிவோடு இருக்கும் இந்த சேனாக்களின் பேச்சுக்களை ஏன் நாம் பெரிதாக எடுக்க வேன்டும். அல்-குர்ஆனைப் படித்து உணர்ந்த மக்கள் நூற்றுக் கணக்கில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் இக்காலத்தில் பொதுபல சேனாவின் சவால்களை பொருட்படுத்த வேன்டிய தேவையில்லை. எனினும் மாற்றுமத சகோதரர்களுக்கு இது பற்றிய தெளிவை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஊடகங்கள் மூலம் வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
Jaffna Muslim
Post a Comment