BREAKING NEWS

சிறுநீரக நோய்க்கு இரசாயன பசளை பயன்பாடு காரணமா?

ஊர்ஜpதமாகவில்லை

சிறுநீரக நோய்க்கு இரசாயன பசளை பயன்பாடுதான் காரணம் என விஞ்ஞான பூர்வமாக உறுதிப்படுத்தப்பட வில்லை. இருந்த போதிலும் 30 இரசாயன பொருட்கள் இங்கு தடை செய்யப்பட்டுள் ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். இது வரை எந்த இரசாயன பொருள் இறக்குமதி கம்பனியும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

வாய்மூல விடைக்காக பீ. ஹரிசன் எம். பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் இலங்கைக்கு 32 நிறுவனங்கள் இரசாயன பொருட்களை இறக்குமதி செய் கின்றன.
அதில் 4 நிறுவனங்களே கூடுதலாக இறக்குமதி செய்கின்றன. இவற்றைப் பதிவு செய்யும் முறை கிடையாது. சிறுநீரகப் பிரச்சினைக்கு எந்த இரசாயனப் பொருள் காரணமாக உள்ளது என்று இதுவரை அடையாளங் காணப்பட வில்லை.
ஆனால் சந்தேகத்துக் கிடமான சில இரசாயனப் பொருட்கள் அபராதம் விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்ப ட்டுள்ளன. 6 மாவட்டங்களில் சில இரசாயனப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதன் போது கருத்துத் தெரிவித்த சபாநாயகர் சிறுநீரக விவகாரம் நாட்டிற்குப் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. சகலரும் இணைந்து இதற்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar