மருதமுனை மெல்போர்ன் சிறுவர் கல்லூரி மாணவர்களின் வருடாந்த உல்லாச வியாபாரச் சந்தை 2014.10.24ஆம் திகதி மருதமுனை மக்கள் மண்டபத்தில் இடம் பெற்றது. இப் பாடசாலையின்
ஸ்தாபகரும், உளவளத்துணையாளருமான எம்.எஸ்.எம்.ஜறூன்
தலைமையில்
இடம் பெற்ற இந் நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக சமாதான கற்கை நெறியின் நிறைவேற்றுப் பணிப்பாளாளர் டாக்டர் எஸ்.எல்.றியாஸ் அவர்களும் கௌரவ அதிதிகளாக மருதமுனை விஷேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி எம்.ஜி.ஆர்.என்.பண்டார அவர்களும், லவ்லி ஜூவலரி
உரிமையாளர் எம்.ஏ.முபீன் அவர்களும் ,விஷேட அதிதிகளாக பெரியநீலாவணை புலவர் மணி ஷரிபுத்தீன் வித்தியாலைய அதிபர் எம்.ஏ.எம்.இனாமுல்லாஹ், பெரியநீலாவணை விஸ்ணு வித்தியாலைய அதிபர் சிவமணி நற்குணசிங்கம், எ.சி.எம்.லொட்ஜ்
உரிமையாளர் எம்.எம்.முஸம்மில், ஆசிரியரும், கவிஞருமான
எம்.எம்.விஜிலி, அம்பாரை கச்சேரி
உளவளத்துயணயாளர் எ.எ. டீன் முஹம்மட், மருத நியுஸ்
முகாமைத்துவப்பணிப்பாளர் எ.ஆர்.அஹமட் நபாயிஸ், டெயிலி நீட்ஸ்
கடையின் உரிமையாளர் ஜாபீர்ஜீ ஆகியோரும் கலந்து கொண்டார்கள். இந் நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் பரிசிகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
படமும் தகவலும்
மருதமுனை றாசீக்
நபாயிஸ்


Post a Comment