தமிழ், முஸ்லிம் மக்களுக்கு முரளிதரன் அறிவுரை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே தமது வாக்குகளை அளிக்க வேண்டும். அவ்வாறு வாக்களிக்காவிட்டாலும் மீண்டும் அவரே நிச்சயம் ஜனாதிபதியாக தெரிவாவார்.
அதனால் தோல்வியை சந்திக்கவுள்ள எதிரணியின் வேட்பாளருக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதால் எவ்விதமான பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை என்று மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
சிங்களவர் ஒருவர்தான் ஜனாதிபதியாக வருவார் தமிழ், முஸ்லிம் மக்கள் வாக் களிக்காவிட்டாலும், நிச்சயம் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் ஜனாதிபதியாக வருவார். ஏனெனில் 90 வீதமான சிங்கள மக்கள் அவர் பக்கம்தான் நிற்கின்றார்கள், தோல்வியடையும் வேட்பாளருக்கு வாக்களித்துப் பழகிய எமது மக்கள் இனிமேலும் தோல்வியடைபவருக்கு வாக்களிக்கும் எண்ணமிருந்தால் வாக்குச் சாவடிக்கே போகாமலிக்கலாம்.
அரசியல்வாதி என்று சொல்லிக்கொண்டு மக்களைத் திசை திருப்பும் வகையில் உணர்ச்சி வசப்பட்டு பேசுவதில் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய அரசியலை பயன்படுத்த வேண்டும். அதனைவிடுத்து ஊடகங்களில் அறிக்கை விடுவது மாத்திரம் அரசியல் அல்ல என்றும் பிரதியமைச்சர் முரளிதரன் கூறினார்.
Post a Comment