இலங்கையின் பொதுபல சேனா இயக்கத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ராஸ்ட்ரிய ஸ்வாயம்செவக் சங்க என்ற இந்தியாவின் இந்து தேசியவாத அமைப்பு நிராகரித்துள்ளது.
கடும்போக்குடைய பொதுபல சேனா இயக்கத்துடன் உறவுகளைப் பேணும் உத்தேசம் எதுவும் கிடையாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
இந்த இரண்டு அமைப்புக்களும் அந்தந்த நாடுகளின் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளை பிரயோகித்து வரும் அமைப்புக்களாகவே கருதப்படுகின்றது.
பொதுபல சேனா இயக்கத்துடன் தொடர்புகளை பேண எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என ராஸ்ட்ரிய ஸ்வாயம்செவக் சங்க என்ற அமைப்பின் பேச்சாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பு சர்வதேச உறவுகளையோ அல்லது கூட்டுறவினையோ பேணியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவின் கருத்து பிழையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தியாவின் பௌத்த மற்றும் சிவில் அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேண விரும்புவதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இஸ்லாத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment