கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்று கூடல் கடந்த 7.10.2014 செவ்வாயக்கிழi இரவு காததான்குடியில் நடைபெற்ற போது ஒன்று கூடல் ஆரம்ப வைபவத்தில் கர்த்தான்குடி மீடியா போரத்தின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா ஆற்றிய உரை
கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களான நாங்கள் இன்று காத்தான்குடியில் முதன் முதலாக மகிழ்ச்சிகரமான ஒன்று கூடலில் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இந்த நாள் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் படவேண்டிய ஒரு நன்னாளாகும். அதுமட்டு மல்ல வாழ்வின் முக்கியத்துவமான ஒரு நாளுமாகும்.
காத்தான்குடி நகரம் தெற்காசியாவில் ஒரு சிகரம்.பசுமையரன நகரம் .இங்கு உலமாக்கள்இ புத்திஜீpவி;கள்இ கல்விமான்கள்இவர்த்தகர்கள்இதனவந்தர்கள்இவறியவர்கள் என பல தரப்பினர்கள் வாழ்ந்துவரும் இந்நகரத்தில் சுமார் ஓரிரண்டுசதுரகிலோமீட்டர் பரப்பில் அண்ணளவாக 12000இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் இவ்வூரில் சுமார் 75இற்கும் மேற்பட்ட மஸ்ஜித்கள்இ 30 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள்இஆண்இபெண் அறபுக் கல்லூரிகள்இஅனாதை இல்லம்இவயோதிபர் பராமரிப்பு இல்லம்இவலதுகுறைந்தோர் இல்லம் என பல்வேறு சமூகசேவை நிறுவனங்கள் நிறைந்த ஊர் காத்தான்குடியாகும்.
இவைகளுக்கு மேலாக இவ்வூர் மக்களின் சுகதுக்கங்களிலும்,மார்க்க விவகாரங்களிலும் இரண்டறக் கலந்து பணியாற்றும் ஜம்இய்யதுல் உலமா,பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என்பன பலபணிகளை செய்து கொண்டுவருகிறது. மக்களின் நலன் கருதி இந்தஅமைப்புக்கள் பல குழுக்களை அமைத்து மக்கள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துகிறது.
அதாவதுஅவசரத் தேவை,கல்வி,நோய், கூட்டு ஸகாத்,கூட்டு உழ்ஹிய்யா, ஹஜ்,திருமண நல்லிணக்கம், கொடுக்கல் வாங்கல், மஸ்ஜித் நிருவாகத் தெரிவு போன்ற தலைப்பில் குழுக்களை அமைத்து செயற் பட்டுவருகின்றது.
இஸ்லாமியகலை வடிவில் இவ்வூர் வடிவமைக்கப்பட்டு பசுமை நகரமாக மாறிவருவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
அந்தவகையில் கடந்த 15 வருடங்களுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட காத்தான்குடி மீடியாபோரம் ஊடகவாயிலாக அதன் பணியை அல்லாஹ்வின் துணைகொண்டு வெற்றிகரமாக செய்து வந்திருக்கிறது. சமூகமாற்றத்தைநோக்கி யபயணத்தில் கடந்த கால சேவைகளைப் பார்க்கின்ற போது உண்மையிலேயே நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பலபணிகளை ஆற்றியிருக்கின்றது. அதனால் தான் ஊடக உறவுகள் வளர்ந்திருக்கின்றன.
காத்தான்குடியில் பல்வேறு சமூகப் பணிகளில் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்துடன் இணைந்து எமது போரம் செயற்படுவதுடன் ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனைகளையும் பெற்று செயற்பட்டுவருகின்றது.
இஸ்லாமிய கொள்கை முரண்பாடுகள் ஏற்பட்டபோதும் கூட பக்கம் சாராமல் அவைகளை ஊடகங்களில் வெளியிட்டோம். அதேபோன்று அரசியல் இஸ்லாமிய பிரச்சார இயக்கங்களின் செயற்பாடுகளிலும் நாம் பக்கம் சாராமல் செயற்பட்டுவருகின்றமை ஒரு சிறப்பம்சமாகும்.
எனவேதான் ஊடக சமூக மொன்றை நோக்கிய இன்றைய புதியபயணத்தில் நாம் கிழக்குமாகாண முஸ்லிம் சமூகத்தின் இருப்பு,பாதுகாப்பு,சமூகங்களுக்கிடையான ஒற்றுமை,சகவாழ்வு என்பன வலுவூட்டப்பட்டு கட்டியெழுப்பப் படுவது இன்றைய காலகட்டத்தின் தேவைப்பாடாகும்.
கிழக்குமாகாண முஸ்லிம்களின் ஒருமைப்பாட்டையும்,தேவைப்பாட்டையும் ஊடககலாசாரத்தின் மூலம் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் இருப்பையும்,பாதுகாப்பையும் உறுதிப்படுத்தமுடியும்.
பெரும் சக்தியாக,அல்லாஹ்வால் அருளாக வழங்கப்பட்டுள்ள ஊடக தொடர்பாடல் எமது சமூகத்தின் உடைக்கமுடியாத கவசமாகும்.
இன்று முஸ்லிம் சமூகத்தை நோக்கிய தொடரான சோதனைகளும், துன்பங்களும் பல சாதக, பாதக நிலைமைகளை உருவாக்குகின்றன.
இதேவேளை முஸ்லிம் ஊடகவியலாளர்களான நாங்களும் கிழக்கு மாகாணத்திலும்,தலைமைத்துவத்திலும் பல்வேறுபட்;ட நெருக்கடிகளை சந்தித்து வருகின்றோம்.
காத்தான்குடி மீடியா போரம் பலவேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவரும் வரிசையில் தான் கிழக்கு ஊடகவியலாளர்களின் மௌனம் கலைகிறது. ஏங்களின் எண்ணங்களை, சிந்தனைகளை, அபிப்பராயங்களைஎம் மனதுக்குள் போட்டுப் போட்டு எத்தனை நாளைக்குத் தான் நாம் மௌனம் சாதிக்கமுடியும். எங்களுக்கென்று ஒருதனித்துவம் இல்லையா? நாங்கள் வந்தான் வரத்தானா? தேசியம் தழைக்க கிழக்குமாகாணம் அடிவேராகவா உள்ளது. ஏன்?
நாம் இ;ன்னும் அடிமைகளாக பயந்தான் கொல்லிகளாக ஒதுங்கிவாழவேண்டும்? கிழக்கில் சூரியன் உதிக்காவிட்டால் என்ன என்பதையும்,அதன் தாக்கத்தையும் நான் சொல்லித்தான் நீங்கள் புரியவேண்டுமா? ஊடக சமாந்தரம் தெரியாதவர்களா நாங்கள்?.
முன்மாதிரியான ஒரு செயற்பாட்டை கிழக்குமாகாண ஊடகவியலாளர்கள் செய்து காட்டவேண்டும்.அங்கத்தவர்களின் நலனில் அக்கறை செலுத்தவேண்டும்.கிழக்குமாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒன்றுகூடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியாபோரத்தை பலவீனப்படுத்துவதற்கோ ,வேறுஒருஅமைப்பை ஏற்படுத்துவதற்கோ அல்ல.
கிழக்குமாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் தனித்துவம் பாதுகாக்கப்படவேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நலன்களைப் பாதுகாக்க கிழக்குமாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்கள் ஒன்று படவேண்டும்.
கிழக்கில் முதன்முறையாக ஒன்று கூடுவதற்கு நல்லதோர் சந்தர்ப்பத்தை புனித தியாகத்திருநாள் ஹஜ்ஜூப் பெருநாள் எமக்குக் களம் அமைத்துத் தந்துள்ளது.ஏன் நாம் இதனைபயன்னடுத்திக் கொள்ளக் கூடாது?என்றஆதங்கம் எம்மத்தியில் உள்ளது.
கி
கிழக்கில் முதன்முறையாக ஒன்று கூடுவதற்கு நல்லதோர் சந்தர்ப்பத்தை புனித தியாகத்திருநாள் ஹஜ்ஜூப் பெருநாள் எமக்குக் களம் அமைத்துத் தந்துள்ளது.ஏன் நாம் இதனைபயன்னடுத்திக் கொள்ளக் கூடாது?என்றஆதங்கம் எம்மத்தியில் உள்ளது.
கி
ழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களான நாம் இன்று பல வழிகளிலும் தனிமைப்படுத்தப்படுகிறோம். இந்த ஆபத்தானநிலையிலிருந்து நாம் விடு படவேண்டும்.சிலரின் பார்வையில் சந்தேகஎண்ணம் உள்ளது. நாம் தூய மனதுடன்,தூய இஹ்லாஸூடன் செயற்படுகிறோம்.நாம் யாருக்கும்,எந்தஅமைப்புக்கும் எதிரானவர்கள் அல்ல.எமது கிழக்குமாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் நாம் இழந்திருக்கும், இழந்தகொண்டிருக்கும் உரிமைகளை வெற்றிகொள்வதே. கறிவேப்பிலைகள் போன்று நாம் இருக்க முடியாது.
கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களின் ஒற்றுமை,புரிந்துணர்வு,சகவாழ்வுகட்டி யெழுப்பப்;படவேண்டும்.அப்போது தான் எமது சமூகத்தின் இருப்பு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.முஸ்லிம் சமூகம் பற்றிய தவறான தப்பபிப்பிராயங்களையும்,புரிதல்களையும் மாற்று சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கு எமது பேனாக்கள் உயிரோட்டம் பெற இந்த ஒன்றுகூடலின் வெளிப்பாடாக இருக்கவேண்டும்.
எமது இன்றைய ஒன்று கூடல் வார்த்தைப் பிரயோகத்தில் உறைந்து போகாமல் எமது செயற்பாடுகளை வளர்ந்து வரும் ஊடக உறவுகளுக்கு வழி காட்ட வேண்டிய கட்டாயப் பொறுப்பில் நாம் இருந்துகொண்டிருக்கிறோம்.
‘
‘
குல்லுகும் றாயின் வகுல்லுகும் மஸ்ஊலுன் அன் றயியதிஹி’நீங்கள் பராமரிப்பாளர்கள் உங்கள் பராமரிப்பு பற்றி நாளை மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்.
இன்று எமது சமூகம் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த நாட்டில் எமது மத உரிமைகளில் இன வாதக் கும்பல்கள் தலையீடு செய்கின்ற அளவுக்கு நிலைமைகள் மாறியிருக்கின்றன. மாற்று சமூகத்தவர்களோடு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்ற இஸ்லாமிய வழிகாட்டல்களை எமது பேனாக்கள் மூலம் உலகறியச் செய்யவேண்டும்.
எங்களுடைய இந்த ஒன்று கூடல் எமது தலைமைத்துவங்களுக்கும், சமூகத்துக்கும் ஒரு நற ;செய்தியை சொல்லவேண்டும். வெறுமனே கூடிக்குலாவி அன்பைப் பகிர்ந்துவிட்டு செல்வதில் அர்த்தமில்லை.
கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களான நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.வாளின் கூர்மையை விடபேனாவின் கூர்மை வலிமையானது. எனவே ஊடகவியலாளர்களின் ஒற்றுமையில்தான் சமூக அபிவிருத்தி, கல்வி,பொருளாதார வளர்ச்சி போன்றன தங்கியிருக்கின்றன.
கிழக்கு மாகாண முஸ்லிம் ஊடகவியலாளர்களான நாம் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.வாளின் கூர்மையை விடபேனாவின் கூர்மை வலிமையானது. எனவே ஊடகவியலாளர்களின் ஒற்றுமையில்தான் சமூக அபிவிருத்தி, கல்வி,பொருளாதார வளர்ச்சி போன்றன தங்கியிருக்கின்றன.
எனவேதான் இன்றைய ஒன்று கூடல் எமது வாழ்வில் மகிழ்ச்சியை தருகின்றது. உங்களின் வருகையால் காத்தான்குடி மண் சிரிக்கின்றது .காத்தான்குடி மீடியாபோர அங்கத்தவர்களுக்கு நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.
எனது தலைமைத்துவத்தின் கீழ் அங்கத்தவர்கள் மனந்திறந்து வெளிப்படைத் தன்மையுடன் என்னுடன் செயற்பட்டதன் எதிரொலியே இன்றுநாம் இந்த ஒன்றுகூடலை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.
எனது தலைமைத்துவத்தின் கீழ் அங்கத்தவர்கள் மனந்திறந்து வெளிப்படைத் தன்மையுடன் என்னுடன் செயற்பட்டதன் எதிரொலியே இன்றுநாம் இந்த ஒன்றுகூடலை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.
Post a Comment