BREAKING NEWS

கல்முனை நாற்றமடிக்கிறது. மேயர் உல்லாசம்.

ஜேர்மன் தேசிய உதைபந்தாட்டப் போட்டியில் கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாக பங்கேற்பு!


German (2)
ஜேர்மன் நியுரம் பேர்க் சர்வதேச மைதானத்தில் இன்று இடம்பெற்ற தேசிய உதைபந்தாட்டப் போட்டி ஒன்றில் கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி
எம்.நிஸாம் காரியப்பர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்துள்ளார்.
ஜேர்மன் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள கல்முனை மாநகர முதல்வர் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், நியுரம் பேர்க் மாநகர முதல்வர் டாக்டர் கிளமன்ஸ் ஜீசெல் அவர்களின் அழைப்பின் பேரில் தனது பாரியார் சகிதம் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
இதில் நியுரம் பேர்க் மாநகர முதல்வர் டாக்டர் கிளமன்ஸ் ஜீசெல் அவர்களும் தனது பாரியார் சகிதம் கலந்து கொண்டிருந்தார்.
இப்போட்டியில் நியுரம்பேர்க் மற்றும் ஹம்பேர்க் ஆகிய அணிகள் பங்கேற்றன. சுமார் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் இப்போட்டியை கண்டுகளித்தனர் அதேவேளை இப்போட்டி சர்வதேச தொலைக்காட்சி ஊடாக நேரடி ஒளிபரப்பப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது கல்முனை மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பர், கல்முனையில் அமையவுள்ள விளையாட்டு மைதானம் குறித்து நியுரம் பேர்க் மாநகர முதல்வருடன் கலந்துரையாடினார்.
கல்முனை மாநகர மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி இந்நிகழ்வில் கலந்து கொண்டிருப்பதையிட்டு தான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.
இவ்வாறானதொரு சர்வதேச நிகழ்வு ஒன்றில் கல்முனையின் அரசியல் பிரமுகர் ஒருவர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட சந்தர்ப்பம் இதுவே முதல் தடவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
அதேவேளை ஜேர்மன் நாட்டுக்கு ஒரு வார கால உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அங்கு சென்றுள்ள முதல்வர் கல்முனையின் அபிவிருத்தித் திட்டங்கள் தொபார்பில் சில உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவிருப்பதுடன் முக்கிய கருத்தரங்குகள் மற்றும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.
German (7)German (3)German (5)

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar