ஏ.எச்.எம்.பூமுதீன்
வவுனியா, ஓமந்தையிலுள்ள பொதுச்சந்தையில் 'எங்கள் கிராமம் உழவர் சந்தை' கடந்த வெள்ளிக்கிழமை அமைச்சர் ரிசாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்டது.
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைக்குரிய இச்சந்தைத்தொகுதி நீண்டகாலமாக இயங்காதிருந்தது. இந்நிலையில், இச்சந்தை புனரமைக்கப்பட்டு அமச்சரால் திறந்துவைக்கப்பட்டது. தற்போது இச்சந்தையில் விவசாயிகள் உற்பத்திகளை நேரடியாக விற்பனை செய்ய முடியுமாக உள்ளதுடன் , மரக்கறிகளை வெளியூர்களுக்கு அனுப்புவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட மாகாண விவசாய பிரதிப்பணிப்பாளர் அ.சகிலாபானு, திவிநெகும திணைக்களத்தின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி அனுர, வடமாகாணசபை உறுப்பினர் எம்.ஜயதிலக, வர்த்தக கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளர்களான அப்துல்பாரி, முத்து முகமது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Post a Comment