BREAKING NEWS

ஹெலஉறுமய வெளியேறினாலும் அரசாங்கம் பலவீனமடையாது


அரசுக்கு முன்வைத்த யோசனைகள் சிறந்தவை; சிலவற்றை உடன் செயற்படுத்த முடியாது - ஜீ.எல்
ஹெல உறுமய கட்சி அரசாங்கத்திலிருந்து வெளியேறியதால் அரசாங்கம் பலவீனமடையாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்கம் சகல தரப்பினருடனும் இணைந்து செல்லவே விரும்புவதாக குறிப்பிட்ட அவர் ஹெல உறுமயவின் யோசனைகளை நிராகரிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
ஹெல உறுமய அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதாக அறிவித்திருப்பது குறித்து நேற்று நடைபெற்ற ஐ. ம. சு. மு. ஊடகவியலாளர் மாநாட்டில் வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த அமைச்சர், எமது அரசாங்கத்திலுள்ள எந்தக் கட்சிக்கும் தமக்கு விரும்பிய முடிவு எடுக்க உரிமையுள்ளது. ஹெல உறுமய முன்வைத்த யோசனைகள் குறித்து சுதந்திரக் கட்சி ஆழமாக ஆராய்ந்தது.
அதிலுள்ள சில யோசனைகள் சிறந்தவை. சிலவற்றுக்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும். அவற்றை உடன் செய்ய முடியாது. சில யாப்பு திருத்த செயற்பாடுகள் பாராளுமன்ற தெரிவுக் குழுவினூடாக முன்னெடுக்க வேண்டும். ஹெல உறுமயவின் யோசனைகள் தொடர்பில் சில திட்டங்களை செயற்படுத்த அரசாங்கம் தயாராகவே இருந்தது தேர்தலில் வெற்றி பெறுவது மட்டுமன்றி சகல தரப்பையும் இணைத்து செயற்படுவதே அரசாங்கத்தின் நோக்கம். ஹெல உறுமயவின் முடிவினால் ஜனாதிபதியின் பலம் குறையாது. ஜனாதிபதி இதுவரை செய்த சேவையையும் எதிர்காலத்தில் செய்ய இருக்கும் பணிகளையும் மக்கள் நன்கு அறிவர் என்றார்.

Share this:

Post a Comment

 
Copyright © 2022 Al Jazeera Lanka. Template Designed by Themes - Videopiar